இரண்டாவது மண்டலம்
திருவலங்கற்றிரட்டு
முதற்கண்டம்
தேவையம்பதி எனும் திருவிராமேச்சுரத்தைச் சார்ந்த பாம்பன் அத்தியாச்சிரம சுத்தாத்துவைத வைதீக சைவ சித்தாந்த ஞானபானு, குமாரசுவாமி யென்னும் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த, திருவலங்கற்றிரட்டு முதல் கண்டமானது, சென்னை சாது பிரசில் பதிப்பிக்கப்பட்டது. இது 1929ல் இராண்டாம் பதிப்பாக வெளி வந்தது. இப்பாடல்களால் இந்நூலின் பெருமை இனிது குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமிகளின் சீடர்களில் ஒருவரும் கல்வியறிவு உடையவராயும், உத்தியோகத்திலிருப்பவராயுமிருந்த L.D. முத்துக் கருப்பப்பிள்ளை யென்பார், சுவாமிகள் அருளிய முதல் மண்டலத்திலுள்ள “நவரத்தின மீக்கூற்று” முதலிய குழிப்புடைச் சந்தப்பாட்டுகளைப் பார்த்துவிட்டு, இவ்விமாகத் தாங்கள் பாடுவதாயின் அவை எளிதாக யாவரும் பாடவும், பொருளறியவும் இயையாதனவாமே. திருஞானசம்பந்தர் முததலியோர் பாடிய பாட்டுக்களைப் போலக் குமாரபிரான் மீதும் பாடுவதாயின், அவை என்போல்வார் பலருக்கும், பயன்படுவனவாமே, என்று உரைத்ததை அங்கீகரித்து சுவாமிகள் இம்முதற்கண்டத்தைப் பாடினார்கள்.
இம்முதற் கண்டத்தில், இறைவழிபாடு நிகழ்த்தும் போது பாடல்களைப் பாடுமுறைமை பற்றி பகர்ந்துள்ளார்.
இந்நூலில், 58 பதிகங்களில் அடங்கிய பாக்கள் 601 ஆகும். வடமொழிச் சொற்கள் கலந்துள்ள தெளத்தியம் எனும் 11 பாடல்களும் பன்னிருகைப் பரமனின் திருவடிப் புகழ் பாக்களாகும். ஆறெழுத்து உண்மையை இரண்டு பதிகங்களில் பறைசாற்றியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட பதிகங்களில் திருத்தலங்களின் பெருமையைக் கூறியுள்ளாரெனினும் அத்தலங்களில் கோயில் கொண்ட மூர்த்தங்களைக் குறிப்பிட்டேனும், மூர்த்திகளின் படைக்கலம், ஊர்தி, தேவியார் முதலியவை குறிப்பிட்டேனும் சுவாமிகள் பாடவில்லை. இதன் காரணம் மூர்த்தி வழிபாட்டினும் சொரூப வழிபாட்டிற்கே முக்கியத்துவம் அளித்ததேயாம். மற்றும் சொரூபலக்ஷணம் ஒன்றின் கண்ணேயே கடவுளை வைத்துத் துதித்தல் மேம்பாடு உடைத்து; அதனால் பந்த விடுதலையும், பிறவி, இறவியற உதவும் என்பதும், இப்பிறவியிலேயே முத்தியெய்தலாம் என்பதும் சுவாமிகளின் தீர்வைகளாகும்.
சேந்தனார் போன்ற சைவப் பெரியவர்கள், ஐமுகச் சிவத்திற்குப் பல்லாண்டு பாடியதுபோல, சுவாமிகள் அறுமுகப் பரமற்கு, “திருக்கந்தர் திருப் பல்லாண்டு” எனும் பதிகம் ஒன்று இயற்றியுள்ளார். இப்பதிகப் பாடல்களை ஒதுங்கால், அப்பாடல்களில் குறிப்பிட்ட தலங்களுக்கு, தமது ஆன்மா சூக்குமமாகச் சென்று தரிசித்து வரும் அனுபவம் பெறுவார்.
இம் முதற் கண்டத்திலுள்ள பாடல்கள் அனைத்தும் அவைகளைப் பாடிய வருடம், மாதம், கிழமை, தேதி, முதலான விவரங்களை ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் குறிப்பிட்ட பண்முறைப்படிதான் பாட வேண்டும் என, அவ்வாறான பண்ணின் பெயரை பாடல்களின் முன் குறிப்பிட்டுள்ளது இந்நூலின் சிறப்பு அம்சமாகும். ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் இசைத் தமிழால் பாடத்தக்கன. ஆதலால் இந்நூல் பாடல்களுள் எந்தப்பதிகப்பாடல் எந்தப் பண்முறைப்படி பாட வேண்டும் எனத் தெளிய, பதிகத்தின் பெயர், பண் மற்றும் பாடல்களின் எண் முதலிய விபரங்கள் அடக்கிய அட்டவணை கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பதிக வரிசை எண் | பதிகத்தின் பெயர் | பண் | பாடல் எண் |
1. | காப்பு | குறள்வெண்பா | 10 |
2. | தெளத்தியம் | கொல்லி | 11 |
3. | திருவருளடிமைப் பிரார்த்தனை | நட்டபாடை | 10 |
4. | நின்றநிலை விண்ணப்பம் | பழம்பஞ்சுரம் | 10 |
5. | அருண்மாட்சிமை | நட்டராகம் | 10 |
6. | அடைக்கலம் | இந்தளம் | 10 |
7. | துக்கரகித பிரார்த்தனை | பழம்பஞ்சுரம் | 10 |
8. | ஆறெழுத்துண்மை | காந்தார பஞ்சமம் | 10 |
9. | ஆறெழுத்துண்மை | கெளசிகம் | 10 |
10. | திருப்பரங்கிரி | பஞ்சமம் | 10 |
11. | திருச்சீரலைவாய் | பஞ்சமம் | 10 |
12. | திருவேரகம் | கெளசிகம் | 10 |
13. | பலகிரி | பஞ்சமம் | 10 |
14. | திருச்சோலைமலை | இந்தளம் | 10 |
15. | திருப்பழநி | நட்டராகம் | 10 |
16. | திருப்பழநி | கொல்லிக் கெளவாணம் | 10 |
17. | திருவாவினன் குடி | காந்தாரம் | 10 |
18. | அடிமை | புறநீர்மை | 10 |
19. | திருக்குன்றக்குடி | காந்தாரம் | 10 |
20. | திருத்தோத்திரம் | பஞ்சமம் | 10 |
21. | திருவுருமலை | பஞ்சமம் | 10 |
22. | திருநெல்வேலிக் கோயில் | நட்டராகம் | 10 |
23. | பூரணம் விழைந்திரங்கல் | இந்தளம் | 10 |
24. | மெய்ப்பற்று | தக்கேசி | 10 |
25. | மெய்ம்ர்க்க நீக்கம் | தக்கேசி | 10 |
26. | அடியாரகம் | சாதாரி | 10 |
27. | திருச்சிந்துபுரம் | நட்டராகம் | 10 |
28. | ஐக்கியமன்றாட்டு | பழம்பஞ்சுரம் | 10 |
29. | அங்கப்பேறு | நட்டராகம் | 10 |
30. | உள்வைப்பு | பழம்பஞ்சுரம் | 10 |
31. | மெய்ம்மார்க்க விளக்கம் | கொல்லி | 10 |
32. | சுப்பிரமணிய ரகசியம் | திருத்தாண்டகம் | 10 |
33. | நமன்றமர் நணுகாநெறி | நட்டபாடை | 10 |
34. | வழிபாட்டின் மாட்சி | இந்தளம் | 10 |
35. | தாசப்பிரகாசம் | கொல்லிக் கெளவாணம் | 10 |
36. | திருக்கருணைப் பிணக்கம | பழம்பஞ்சுரம் | 10 |
37. | மிகைவெல் வயவை | யாழ்மூரி | 10 |
38. | மெய்ப்போதகம் | வியாழக் குறிஞ்சி | 10 |
39. | திருவாலவாய | கெளசிகம் | 10 |
40. | திருக்கன்னிநாடு | இந்தளம் | 10 |
41. | திருகொடுமளூர் | சாதாரி | 10 |
42. | திருப்போற்றி | திருத்தாண்டகம் | 10 |
43. | பிரப்பன்வலசை | 10 | |
44. | பரமப்பிரகாசம | கொல்லி | 10 |
45. | வாதனை நீக்க மன்றாட்ட | தக்கராகம் | 10 |
46. | துயரறுக்கு மார்க்க விளக்கம | நட்டராகம் | 10 |
47. | எண்ணலங்கார லகரி | இந்தளம் | 10 |
48. | அருளானந்த லகர | பியந்தைக் காந்தாரம் | 10 |
49. | பூரணப்பொருள் | கொல்லி | 10 |
50. | திருத்தேவை | கெளசிகம் | 10 |
51. | திருப்புலியூர் | நட்டபாடை | 10 |
52. | திருப்போரூர் | சீகாமரம் | 10 |
53. | திருத்தணிகைமலை | பஞ்சமம் | 10 |
54. | மயிலமலை | பஞ்சமம் | 10 |
55. | திருச்செங்கோடு | நட்டராகம் | 10 |
56. | கழுகுமலைபாதி கந்தகிரி பாதி | கொல்லிக் கெளவாணம் | 10 |
57. | திருவுடுப்பை | இந்தளம் | 10 |
58. | குமாரானந்தலகரி | மேகராகக் குறிஞ்சி | 10 |
59. | சத்திய போதகம் | கெளசிகம் | 10 |
60. | திருக்கந்தர் திருப்பலாண்டு | பஞ்சமம் | 10 |