ஐந்தாவது மண்டலம்
திருப்பா எனும் பெயரிய திவ்விய நூல் ஒன்றே இம் மண்டலத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இரண்டு புத்தகங்களாக அமைந்தவை.
முதற் புத்தகத்தில், நூற்சிறப்பு, திருப்பத்தட்டவணை திருப்பாட்டு முதற்குறிப்பு அகராதி, மேற்கோள் பனுவல்களின் பெயர்கள், விடயங்களும் பக்கங்களும், நூன்முகம், திருப்பாமூலமும் திட்பம் எனும் உரையும், வேதாந்த சித்தாந்த சமரசப்படத்துடன் உள்ளது.
இரண்டாம் புத்தகத்தில், திருப்பத்து அகராதி, திருப்பாட்டு முதற்குறிப்பு அகராதி, திருப்பா மூலமும் குறிப்புரையும், எஞ்சிய பாடல்களுக்கு அரும்பத விளக்கங்களுடன், சிவலிங்காகார படம், குழைத்துப்பத்து கூறுமாறு இரண்டு உண்டு என்பது பற்றி நிகழ் பொருள், பெருமிறைக் கவியுரை, மற்றம் அதன் சுருக்கம் போன்றவை அடங்கியுள்ளன.
இந்நூலில் உள்ள பாக்கள் 1101ம் சுவாமிகள் துறவற நிலை எய்திய பின்னர், துர்முகி வருடம் மாதி மாத மகாமக வெல்லையில் (கி.பி. 1897) தில்லையை அடுத்த பின்னத்தூர், குயவன் பேட்டை போன்ற சிற்றுர்கள் தங்கிய நாட்களில் அருளினார்கள்.
உபநிடதங்கள் 54, வேதபாகங்கள், ஆகமங்கள், ஸ்ம்ருதி, வடமொழி தென்மொழி புராணேதிகாசங்கள் ஸூத்திரங்கள், பாஷ்யங்கள், தமிழ் மறைகளான சிவஞான போதம், திருமந்திரம், முதலியனவுடனும், ஸ்ரீ அருணகிரி நாதர், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பாடல்களுடன், இலக்கண நூல், நிகண்டு பைபிள் முதலியவைகளாம். திருப்பா என்பதற்கு மேன்மையான பாட்டு எனவும், முழுமுதற் பரம் பொருள் தோத்திரப் பாக்களாகவும், சாஸ்திர ஆராய்ச்சிப் பாடல்களாகவும், அகர உயிர் எல்லா எழுத்திலும் பரவியிருப்பது போல, எப்பொருளிலும் கலந்து விளங்கும் இறையின் பரத்வம் பகரும் நூல் இஃது என்றும், இந்நூலை ஓதின் பிறவி அறும் என்ற முடிந்த முடிவை கூறும்.
திருப்பா எனும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சிலவற்றைக் காண்போம்.
இந்நூலில் பொதிந்துள்ள கருத்துக்களை நம் சிந்தைக்கும் செயலுக்கும் ஆக்கினால் கரு நோய் அகலும். திட்பம் எனும் பெயரில் அமைந்துள்ள விசேட விரிவுரை பன்முறையும் படித்துணர வேண்டியவைகளேயாம். இந்நூலில் அடங்கிய பதிகங்கள், பாடல்களின் பாவினங்கள், பதிகப் பாடல்களின் எண்ணிக்கை முதலிய அடங்கிய அட்டவணை ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எண் | பதிகம் |
பாவினங்கள் |
பாடல்கள் |
1. | கடவுள் வணக்கம் |
பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
1 |
2. | கருணைக்குகப்பிரமம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
3. | ஆனந்த பூர்த்தியுரம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
4. | திவ்விய சுப்பிரமணியம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
5. | பரிபூரணானந்தம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
6. | பரமபதி | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
7. | சுப்பிரமணியபரமம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
8. | இன்பப்பிரவாகம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
9. | ஆனந்தமான பொருள் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
10. | ஆனந்த நடனசிவம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
11. | நின்மலானந்த பரம் | பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
12. | பேசாவாழ்வு | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
13. | குகப்பரமம் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
14. | பரசுப்பிரமணிய வாழ்வு | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
15. | குக சம்பு | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
16. | பெரியசாமி | ஏண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
17. | திருவருட்கடல் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
18. | பராபரம் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
19. | பரம்பொருள் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
20. | நினைத்தாலென்பிறப்பு அறுத்திடும் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
21. | தெய்வம் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
22. | தன்னையாள் சுவாமி | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
23. | சாதானந்த வந்தி | கட்டளை கலிப்பா |
10 |
24. | கங்கையணிவேணி | கலி விருத்தம் |
10 |
25. | நட்புக்குகந்த நாயகம் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
26. | சருவபூரண சயம்பு | பதினான்கு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
27. | பரம் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
28. | அயலாவதுமென்னே | கலிவிருத்தம் |
10 |
29. | பரதேவதை | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
30. | குகதேவு | கலிவிருத்தம் |
10 |
31. | சிற்றுணர்வே | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
32. | எம்பரன் | தரவு கொச்சக் கலிப்பா |
10 |
33. | கருத்து | கலி நிலைத் துறை |
10 |
34. | பயின்றறிபவன் | பதினான்குசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
35. | குருமணி | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
36. | மெய்யான் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
37. | மாவிண் | பதினான்குசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
38. | சருவேசுரபதி | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
39. | சுப்பிரமணிய விலாசம் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
40. | கதிசேர்மின் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
41. | துயர் தீர்வதெவ்வாறு | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
42. | ஆனந்த வெயில் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
43. | ஞான தெய்வம் | பதினான்குசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
44. | சீர்த்தியுடைத் தெள்ளறிவு | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
45. | ஆரணம் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
46. | அவர் நான்முகனார் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
47. | சீருயர்ந்த வான்மா | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
48. | உலகமெலாம் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
49. | அமிர்த தயா | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
50. | வண்ணம் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
51. | திருநிறைந்த சிற்சக்தி | கட்டளைக்கலிப்பா |
10 |
52. | பூந்தொடையல் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
53. | சந்திரமெளலி | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
54. | கடல் | அந்தாதி கலிவிருத்தம் |
10 |
55. | அகண்ட பரம் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
56. | பொன் | கலிவிருத்தம் |
10 |
57. | பெரிய சுப்பிரமணியம் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
58. | கருணைத் தேவு | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
59. | நெஞ்சம் | கலிவிருத்தம் |
10 |
60. | திருவளரனந்தர் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
61. | சிவத்திரு | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
62. | மலைமகள் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
63. | இறை | கலிவிருத்தம் |
10 |
64. | சொல்லுவேனீதி | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
65. | தேரிலூர் | கலிநிலைத் துறை |
10 |
66. | உலகநோக்கினார் | வஞ்சிவிருத்தம் |
10 |
67. | பரஞ்சுடர் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
68. | மதியுங்கருளும் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
69. | காங்கேயம் | கலிநிலைத் துறை |
10 |
70. | வே தா. | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
71. | மாணிக்கவாசகர் | கலிவிருத்தம் |
10 |
72. | அறியேன் | கலிநிலைத் துறை |
10 |
73. | வியோமபிரான் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
74. | பொன்னவை | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
75. | சீர்சான்ற பஞ்சருத்ரம் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
76. | நிலத்திற்பன்மத சாஸ்திரம் | கலிவிருத்தம் |
10 |
77. | புயல்வாழ் தென் மலை | வஞ்சித் துறை |
10 |
78. | புவன மீது பன் மரபினார் | பதினான்குசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
79. | துறவு | கலிநிலைத் துறை |
10 |
80. | சுருதி பணித்தபடி | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
81. | மகியினேயமுளர் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
82. | கந்தசாமி | ஒன்பதின் சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
83. | புகழ்மருவு மறைகள் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
84. | தோலுயர் தயித்திரியம் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
85. | முத்தணி கொங்கை | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
86. | நீர்வேந்தயன் | கலிவிருத்தம் |
10 |
87. | சீர்பூத்தவிராமரகசியம் | தரவு கொச்சகக்கலிப்பா |
10 |
88. | திருமலிந்த லிருக்கு | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
89. | விலகுவர் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
90. | பொன்னினான் மறை | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
91. | சிதம்பரசிவம் | எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
92. | வித்வொளி | பதின்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
93. | பொன் மஞ்சள் | கலிநிலைத் துறை |
10 |
94. | ஒல்லுநர் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
95. | திருத்திமிரு மருட்சம்பு | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
96. | கனகம் | பதினாறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
97. | ஓங்காரம் | வெண்டளையான்வந்த இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா |
10 |
98. | இரணிய கருப்பன் | அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
99. | புகழ்பூத்த மந்திர நூல் | தரவு கொச்சகக்கலிப்பா |
10 |
100. | அறை மலிந்த பனுவல் | எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
101. | பூப்புகழ்ப்பிரமன் |
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
102. | புவனவோய்வு |
கலிநிலைத் துறை |
10 |
103. | அமிழ்தமார் |
பன்னிருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
104. | உரைப்பொடி |
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
105. | பொறி |
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
106. | திருமறை |
கலிவிருத்தம் |
10 |
107. | ஞாலம் |
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
108. | பரஞ்சோதி |
கட்டளைக் கலிப்பா |
10 |
109. | பரம்பரன் |
கலிவிருத்தம் |
10 |
110. | வேதம் |
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
10 |
111. | தங்கவம்பலம் |
பதின் முன்று சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
1 |
|
ஆக மொத்தம் |
1101 |