Logo


English

மென் வலைப்பூ மெய்யன்பர்களுக்கு வேண்டுகோள்!

இந்த வலைப்பூவில் சுவாமிகளின் பாடல்கள் என்னுடைய நண்பர்கள் மூலமும், பல மெய்யடியார்கள் மூலமும் தட்டச்சு செய்து வெளியிடப்படுகின்றது. இதில் ஏதேனும் குறைகள், எழுத்துப்பிழைகள் தென்பட்டாலும், அல்லது விமர்சனங்கள், வேண்டுகோள்கள் அனுப்ப விரும்புவோர், எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும். உங்களுடைய கருத்துக்களை சம்பந்தப்பட்ட புத்தகத்தில் பார்த்து சரி செய்துக் கொள்கிறோம்.

தாங்களும் சுவாமிகளுக்கு தொண்டு செய்யவிரும்பினால், சுவாமிகளுடைய நூல்களை ஒருங்கிணைப்பு தமிழில் (Uni Code Vanavil / Chitra / Ganga) தட்டச்சு செய்து கொடுக்கலாம். அன்பர்கள் விரும்பினால் அவர்களுடைய பெயர் இந்த வலைப்பூவில் வெளியிடப்படும். ஆங்கிலத்திலும் சுவாமிகள் பாடல்கள் பதிவு செய்ய விரும்புவதால் தங்களுக்கு ஆங்கிலத்தில் நல்ல ஞானம் இருந்தால் சுவாமிகளின் பாடல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டுகிறோம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மீது புதுக் கவிதை மூலம் பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியில் இருந்து எடுக்கப்பட்ட ரிங் டோன் தங்கள் கைதொலைபேசியில் ஒலிக்க விரும்பினால் அதையும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதற்கான குறிப்பும் இந்த வலைபூனில் வெளியிட்டுள்ளோம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருளிய பதிகங்களின் கட்டுரைகள் தங்களிடம் இருந்தால் வரவேற்கின்றோம். அந்த கட்டுரைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வலைபூனில் இலவசமாக வெளியிடப்படும் என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.

மேலும், இதில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் / பாடல்கள் / படங்கள் / ஓவியங்கள் தங்கள் ஞானத்தை விரிவுபடுத்திக் கொள்ள அச்சு செய்து கொள்ளலாம். இந்த வலைபூணில் உள்ள www.pambanswamigal.org என்று நீரோட்டங்கள் குறிப்பிடப்பட்ட படங்கள் / ஓவியங்கள் எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மன்றத்தில் இருந்து எழுத்து மூலமாக ஒரு தனி நபர் / குழு முன்அனுமதி பெற்றுக்கொண்டுதான் ஐந்து நகல் படிகளுக்கு அச்சு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை தங்களுடைய வியாபார நோக்கோடு எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுந்த இழப்பீட்டுத் தொகை அவர்களிடமிருந்து பெறப்படும்.

இந்த வலைப்பூ விரிவடைந்து உலக மக்களுக்கு சுவாமிகளின் பாடல்கள் மற்றும் விளக்கங்கள் இலவசமாக தர விரும்புவதால் விளம்பரங்களும் வரவேற்கப்படுகின்றன.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்.