Logo


English

மனது

கலிவிருத்தம்
நட்டபாடையெனும் பண்ணிலும் பாடலாம்


உலகம்புகழ் கலைமாமகள ளுரியோனெனும் வேதா
சொலுமம்பிர ணவலொண்பொருள் சொனவீச விராயா
கலகஞ்செயெ னகமென்பது கரையும்படிப் புரிசூர்
தொலையும்படி யருளென்றுசொல் சுகமேவுவை மனதே.

1

சாராருயரேழத்திரி தகரத்தவ மேசெய்
ஓரேழிரு டிக்குந்தலை யுடையப்புனல் பெருகக்
கூராரயில் வேல்விட்டிடு குமரேசன தீரம்
வாராவிடி னாமுய்யவோர் வழியேதுசொன் மனதே.

2

அண்ணாமலைவழியிற்பரையருகிற்புன லிலையென்
றெண்ணார்திற னோர்ந்தேயயி லேவித்தெளி வாய
தண்ணாருயர் நன்னீரலை தாவப்புன றந்த
அண்ணாவருள் புரியாயென வறையாயளி மனதே.

3

ஏகாதச வேணோர்பதி னொருகைப்படை யாயும்
வாகார்கர மொன்றிற்சிவ வலிதானயி லாயும்
சாகாவரு ளுருவாயும் விளங்கச்சுடர் தனியை
வாகாவென வேத்தாயருள் வழிநாடிய மனதே.

4

தாவுங்கயல் விழிவள்ளி தனாதுண்மை பொருந்தக்
காவிஞ்சிய வனவேடர்கள் கறுவிக்கலி தருகாற்
கூவும்படிச் சரணாயுதம் விளித்தேயடல் கொண்டோய்
வாவென்றுசொல் வாழ்வாயருள் வழிநாடிய மனதே.

5

தேவென்பன யாவும்புகழ் சிவசம்புவு முமையும்
மேவுங்கயி லாயந்தனின் மிளிருங்கொலு விடையே
தூவிண்சுரர் பரவும்படிச் சடருங்கும ரேசா
வாவென்றுசொல் வாழ்வாயருள் வழிநாடிய மனதே.

6

முன்னைத்தவ முற்றுப்பெற மொய்ம்பேறக ரேசன்
என்னப்புவி வந்துன்றனொ டிகலிக்கொலை யயிலாற்
கன்னற்சடம் வகிருண்டு கலாபந்துன நின்றான்
தன்னைக்கொளு முருகாவரு டாவென்றழு மனதே.

7

முருகாவரி மருகாவெனை முழுதுங்கொள வுளவோர்
குருவேபுக வினிவேறிலை கூகாவென வுறவோர்
அருகேயழு முனமேயுன தடியேபெற வருளாம்
பொருளீயென வுயர்வந்தனை புரியாயளி மனதே.

8

தென்றாணுவி லென்றும்வதி சிந்தாவறி வாளன்
மன்றாடி வணங்கும்பெரு மானேமுரு கோனே
என்றாளுவை யென்றாளுவை யென்றேவிக வாசித்
தொன்றாநிலை கூடும்படி யுயர்வாயளி மனதே.

9

ஆசேதுமி லாநின்னுடைய யனுபூதி யடைந்தே
தேசோடுன தடிமேயவொர் தெருளாரரு ணகிரி
ஆசானென மிளிர்தாரக வரசேயெனை யாளென்
றேசாதனை புரியாயினி யெய்தாய்துயர் மனதே.

10


Home    |    Top   |    Back