சண்முக நாமாவளி
ஹர ஹர சிவசிவ சண்முக நாதா
ஹர ஹர சிவசிவ வென்முக நாதா
ஹர ஹர சிவசிவ பரம விலாசா
ஹர ஹர சிவசிவ வபய குகேசா
அருண கிரிபரவு மருணெறி நாதா
தரும வுறுவர்புகழ் சததள பாதா
அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா
எனினிய குருநித மெணுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா
பாசா பாச பாப விநாசா
மாசே றாத மான நடேசா
போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜா தேவஸ மாஜா
தீஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓஞ்சர வணபவ வுருவே யருவே
Home | Top | Back