நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
11. | பலகிரி | 10 | |
பலன் | முருகனின் கருணையை சீக்கிரம் பெற வேண்டுமா?
|
பலகிரி
பாடல் - பலகிரி (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பண் - பஞ்சமம்
தேவாரப் பாடல் - தானெனை முன் படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்
கனைகழ னிலவிடு சததள விணையடி கருதிடு தவமுடையோர்
மனவெளி தனினட மிடுமர ரசிவ வடிவுடை யயிலரசே
பனிமலி யிதழவிழ் தொடைய லணிபெரும பலகிரி யுறைமுருகா
இனிமைசெய் புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ. .. 1
களிகிளர் முசுமுக னெனநிரு பனாரிய கடவுளர் கதியினுமேற்
கொளவரு ளினனென வழிபடும் விபுதர்கள் குலவுற வுளசிவனே
பளக வதரவுமை கரம்வள ரழகிய பலகிரி யுறைமுருகா
இளைமலி புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ .. 2
அருமறை புகழ்நிறை குருபர மிதுவெனு மழைவொடு தினமுணர்வாய்ச்
சரவண பவகுக வெனவழி படுபவர் சனன மரணமறவே
பாரிவுட னடிமைகொ ளகணித பசுபதி பலகிரி யுறைமுருகா
இருசுறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ. .. 3
துணிசெ யிரவிகுல வரச னொருவனுயர் சுசியொடு தபசுசெயாத்
திணிமணி மதுரையி னரனது தொழினனி செயவென நசைஇயவா
பணிய குமரகுரு பிரணவ வுருவொளிர் பலகிரி யுறைமுருகா
இணையுறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ .. 4
இலகு கயனயன வுமையனு தினம்வள ரிளைமலி மணி மதுரைப்
புலவர்க கடலைவனை யறுமுக வருணெறி புகவரு ளியபரனே
பலநவ மணிநிறை வளமுட னுயாரிய பலகிரி யுறைமுருகா
இலவச வளியுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ .. 5
நடமயின் மிசையொரு சுடர்மணி யெனவரு நவசபை களின்முதல்வா
தடவிடின் னிசைமுனி பகிரத னடிமைகொள் சமரச நிலையிறைவா
படமுடை மணியர வணிபவர் மனமகிழ் பலகிரி யுறைமுருகா
இடரறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ. .. 6
சகல கலைகளையு முணர்வுறு வலிமலி தவமிகு குறுமுனியைச்
சுகுர்த வடிமைமுறி கொளுமொரு குருபர சுருதிகள் புகழ்சிவனே
பசுநிறை சரவண பவமறை யவர்புகழ் பலகிரி யுறைமுருகா
இகழ்வறு புரிவுட னெனையு மடிமை கொள விதுநல தருணமரோ. .. 7
புதுமல ரளக வனிதையரும் விழைவுகொள் பொருவறு குறமயிலாள்
அதிமது ரவரவ ரசநுகர் தலைவவொள் ளமுதவி புதர்பரனே
பதும நனைநிரைக ளவிழும் வளமொழுகு பலகிரி யுறைமுருகா
இதமிகு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ. .. 8
வியனென வெயில்விரி விமலர் கயிலைமலை மிசைநிறை கொலுவுடையோய்
மயறெறு கவுணியன் விடமமு தெனநுகர் வலியுள னழகுடையான்
பயிறமி ழணிபுனை பசுபதி யுடன்மொழி பலகிரி யுறைமுருகா
இயல்புறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ .. 9
முரணறு புகழ்சொன வருண கிரியைநி முடிபுடை யறிஞனெனத்
தரணிய ருவணையர் புகழ வருளினவொர் தகரவெ ளியிறைவனே
பரவரு நெடுவள மலிய முகில்கள்கவி பலகிரி யுறைமுருகா
இரிபறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ. .. 10