நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »ஆறாவது மண்டலம் பாடல்கள்
ஆறாவது மண்டலம் பாடல்கள்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பதிகம் கூற்று
ஆறாவது மண்டலம் சிறு குறிப்பு
ஸ்ரீமத் குமார சுவாமியம் எனும் நூல் இந்த மண்டல நூலாகும். இந்நூலில், ஸ்ரீமத் குமார சுவாமியம் மூலமும், திருவிளையாடற் காண்டத்துப் பொழிப்புரையும் அடங்கியுள்ளது. இந்நூல், ஓசைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை, என்பன நிறைந்து நிலாவு நீர்மையால், அழகும் ஆழமுமுடைய ஒரு முதல்வன் நூலாம். இந்நூலைப் பத்திமையிற் பாடுவோரும், பொருள் உரைப்போரும், பூசிப்போரும், எல்லா நலனும் பெற்று வாழ்க எனச் சுவாமிகளே நூலின் எழுவாயுரையில் வாழ்த்தியுள்ளார். மேலும், புத்தகங்கள் கடவுளை உண்டாக்க வரவில்லை; நிச்கயிக்கவந்தன எனும் உண்மை நூலின் எழுவாயுரையில் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்கத்தக்கதே.
இந்நூல், திருவிளையாடற் காண்டம், கேத்திரக் காண்டம், கடாவிடைக் காண்டம், வேட்கைக் காண்டம், பல திறப் பொருட்காண்டம் எனும் ஐந்து காண்டங்களாலாயது. அவை பாடிய வருடம், மாதம், கிழமை, தேதி முதலிய விபரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் 1195 பாக்கள் உள்ளன. இந்நூலின் முதற் காண்டமாகிய திருவிளையாடற் காண்டம் 630 செய்யுட்களைக் கொண்டது. இரண்டாவது காண்டமாகிய கேத்திர காண்டம். கடாவிடைக் காண்டம் 130 பாக்கள் கொண்ட மூன்றாவது காண்டம். இதில் அசோக சாலவாசம் எனும் எட்டுப்பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. நான்காவதாக இந்நூலில் அமைந்துள்ளது வேட்கைக் காண்டம். இது 100 திருச் செய்யுட்களைக் கொண்டது. இறுதியாக அமைந்த ஐந்தாங்காண்டம் பலதிறப் பொருட் காண்டமெனப்படும். இதில் 212 பாக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் அத்துடன், ஆனந்தக்களிப்பு, சமாதான சங்கீதம், தங்க ஆனந்தக் களிப்பு ஆகிய மூன்று பாடல்களும் சேர்ந்தது தான் ஆறாவது மண்டலம்.
ஸ்ரீ மத்குமார சுவாமியம் எனும் இந்நூலில் அமைந்துள்ள பதிகங்கள், பாவினங்கள், பாடல்களின் எண்ணிக்கை போன்ற விபரமடக்கிய அட்டவணை பின்வருமாறு:-