நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
14. | திருப்பழநி (2) | 10 | |
பலன் | முருக வழிபாட்டினால் நவகிரகங்களும் நமக்கு அருள் தரும் வழி தெரிந்து கொள்ள வேண்டுமா?
|
திருப்பழநி (2)
திருப்பழநி (2)
பண் - கொல்லிக்கெளவாணம்;
தேவாரப் பாடல் - தில்லைவாழ் ;
இடையிறந்த நிலையையருள் சிறந்தகந்த வோங்கல்
என்னுமொரு சிலைச்சிமயங் களிற்றமிழ னெடுத்த
புடைமலிந்த சத்திகிரி சிவகிரியைத் தண்டிற்
பூட்டியிருங் காவடியெ னச்சுமந்தி டும்பன்
மடைமலிந்த வாவினன்கு டிக்கண்வைத்த போது
மகியிலுற வனைந்துசிவ கிரியின்மிசை நின்ற
படைமலிந்த தலமெனுநற் பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 1
மணியரவிற் கண்வளரு மாமரைக்கண் ணானும்
மலர்த்தவிசு மீதுமிளிர் வாணிதலை மகனும்
அணிகயிலை யருநெறியி லரணிருந்துள் ளானும்
அருணன்பதி னோருருத்திர ரசுவனிதே வருமாத்
திணிமருவு சேடனுடன் றிகழிருநால் வசுவும்
சிந்தைசெய்த பெருங்கருணைத் திருவடியைத் தொழுதேன்
பணியிதுவென் றுரைத்தருடி பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 2
அந்தகனுஞ் செஞ்சுடரு மிந்திரனீ சானன்
அனிலனிரு திபுனலிறை யளகையிறை யோனுஞ்
சந்ததமுங் கைதொழுத தரமறிந்தே யுரிய
சம்பத்துக ளளித்தவுன்றன் றாள்குரங்கு கின்றேன்
கந்தமுத லைந்தினிலை கடத்திநெறி கொடுத்துக்
கருவினுழை யாமலென்னைக் கலந்தடிமை கொள்ளாய்
பந்துரப்பொன் வண்டறையும் பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 3
திங்களுமெல் லாதவனுஞ் சீவன்மழைக் கோளும்
சேய்சனியுந் தூதுவனுஞ் சீறாவி ரண்டும்
அங்கைதனி லளியலர்கொண் டருச்சனைமிக் காற்ற
யனந்தநுதி செய்தவுன்ற னடிதொழுது துதித்தேன்
மங்களமொ டேகருணை வாரிதியி லென்னை
மனமுவந்து குடையவிட்டு வழியடிமை கொள்ளாய்
பங்கயங்கண் மடலவிழும் பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 4
சலமடந்தை நிலமடந்தை சாரதையுஞ் சசியும்
சாயையொ டனன்மனைவி தண்ணளின மாதும்
திலகநுத லூர்வசியுந் திருமலிந்த ரம்பை
திலோத்தமையு மேத்துனது திருவடியைத் தொழுதேன்
சலமிகுந்தே யலைமலிந்த சனனக்கட னடுவே
தத்தளிக்கு மெனையுனது தண்ணருளோட டத்திற்
பலநிமிர வேற்றிக்கொளாய் பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 5
அத்திரியுங் கெளசிகனு மகத்தியன்கா சிபனும்
அரியதவ மார்க்கண்டனு மாங்கிரச முனியும்
புத்திமலி சமதக்கினி புலத்தியமா முனியும்
பொருவிகந்த வசிட்டனொடு பரத்துவச முனியும்
சத்தியமா வணங்கியவுன் றாள்குரங்கு கின்றேன்
தயவுடனல் லருளளித்துத் தாழடிமை கொள்ளாய்
பத்தர்கணஞ் சூழவுள்ள பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 6
சனகன்சுகன் பிருகுமுனி சனற்குமர முனியும்
ததிமுனியு நாரதனுஞ் சத்தகுனன் முனியும்
வினையொழிந்த பதஞ்சலியும் வியாக்கிரக்கான் முனியு
வியாசனும்ப ராசரனும் விரதபற்ப முனியும்
தினமுவந்து கண்டவுன்றன் றிருவடியை வலித்தேன்
திருவுளத்திற் கேற்றதொண்டு செயவடிமை கொள்ளாய்
பனிகிளர்ந்த கருவிகவி பழநிப்பதி மேவும்
பவடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 7
இயம்பாரிய வருந்தவஞ்சா லிரணியமா முனியும்
இறைமையுள்ள துருவாச னேரண்டன்பி னாகி
வயங்குசச்சி தானந்தனல் வான்மீகி ரோமன்
மாதவங்கொள் கலைக்கோட்டு மாமுனியு மதிக
நயம்பெறவென் றுவந்துவந்து நாளுந்தாரி சித்த
நறுமணஞ்சா லுன்சரணை நானும்வழி பட்டேன்
பயன்படுமா றருள்புரிதி பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 8
வாரிறுக்குங் கொங்கைவளர் மாதுமைகா லாரியின்
மணியுதித்த நவசத்திகண் மக்கணவ வீரர்
சீரிருக்கு மோரிலக்கர் தேசுதிக ழமரர்
சிவகணமுங் கந்தருவர் சித்தருங்கின் னரரும்
ஏரிருக்கு நாகரொடு தானவர்மா னுடரும்
மேத்துனது பூம்பதத்தை யெணுமெனைக்கண் பாராய்
பாரிருக்கும் வரைவளங்கொள் பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 9
அரியசித்தி யவிர்மதங்க ராசிறந்த வகுளி
யனாதிநத ராதிநத ரழகுமச்சேந் திரரும்
காரிலறுகோ ரக்கரொடு ககனநடை யுடைய
கடேந்திரர்ச தோகநதர் கருத்துறுசத் திருயம்
அருணகிரி யானுநினைந் தனந்தசித்தி படைத்த
அன்புகண்டு நின்பதத்தை யனுதினம்வந் தித்தேன்
பாரிவுடனல் லருள்புரிதி பழநிப்பதி மேவும்
பவுடியதண் சரவணத்தம் பரமயவெம் மானே. .. 10