நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
16. | அடிமை | 10 | |
பலன் | சமுதாயத்தில் உயர்ந்த வாழ்வு பெற வேண்டுமா?
|
அடிமை
பாடல் - அடிமை (எழுசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்)
பண் - புறநீர்மை; தேவாரப் பாடல் - மங்கையர்கரசி; iஇராகம் - பூபாளம்; தாளம் - ஆதி
கற்றவர் தொடுத்துக் கனிவுடன் சூட்டுங்
கவித்தொடை யேற்றெழின் மறைதான்
சொற்றிடு கதியை வழங்கருண் மாவிண்
சோதியே சொலற்கருஞ் சுடரே
இற்றைநா ளுன்காற் போதினை யேத்தற்கு
எனதவஞ் செய்திருந் தேனோ
அற்றையெற் கதிர்த்த வணமருள் வானே
யப்பனே யொப்பிலா தவனே. .. 1
கல்வியங் கடலைக் கடந்துமேன் மிளிருங்
கருத்துடை யெளவைமூ தாட்டி
சொல்வண முலகிற் பழுதறு பொரியோர்
தொண்டரென் றதிர்த்ததே சரதம்
ஒல்கிடா வீரப் பெருந்தகை யுடையோ
யுனதடித் தொழும்புமெற் குறுமோ
அல்கலில் லாதெனை யாண்டுகொள் வானே
யப்பனே யொப்பிலா தவனே. .. 2
பேயினுங் கடையேன் பிணத்தினுந் தீழ்ப்பேன்
பிறங்குநற் குணமெது மில்லேன்
நாயினுங் கடையே னலனுற வெனநீ
நறுநெறி குயிற்றிய வருளாம்
நேயநல் வரவுக் கொருகர மாறிஇந்
நெடுநிலப் பரப்பிடை யுண்டோ
ஆயுத வயில்வேற் குருபர வெனையா
ளப்பனே யொப்பிலா தவனே. .. 3
உன்னெறி துறந்தே யுன்னடி மறந்தே
யுஞற்றிடு பெரும்படர்த் தீமை
தன்னையுந் துறந்தே தன்னையு மறந்தே
தன்னையு மறித்துய்யு மாறால்
என்னைநீ கலந்தா ளெம்பெரு மானே
யிணையறு மாசிலா மணியே
அன்னையே யருள்சா லறுமுகச் சிவனே
யப்பனே யொப்பிலா தவனே. .. 4
சனகனுஞ் சனனி பிதாமகன் பெருமான்
றமயனுஞ் சிவனென நினைத்து
மனைவிநி ராசை மகர்வள ருயிர்கள்
மலரடித் தொழும்பர்க ளுறவோர்
எனமதித் துயுநா ளெந்தநா ளாகு
மெனக்குநீ யருளிய வண்ணம்
அனகனே யருள்கூ ராறெழுத் திறையே
யப்பனே யொப்பிலா தவனே. .. 5
ஊரெலாஞ் சமைக்குஞ் சோறுய ருணவிவ்
வுலகமெ லாம்விரி பாயல்
ஏருலா முடையெண் கோவண மாமறை
யியம்புவெண் பொடிநறுஞ் சாந்தம்
சீருலா முருத்தி ராக்கமெய் யணிகலன்
செபிப்பது சடக்கர மெனநீ
ஆர்வமொ டெனக்காக் கிடவென்று காண்பே
னப்பனே யொப்பில்லாதவனே. .. 6
தாளினை பழிச்சு மேழையே னின்றே
சாகினுஞ் சாகுக வினியெந்
நாளுமிங் கிருக்கினு மிருக்குக சுவர்க்கமோ
நரகமோ சோரினுஞ் சேர்க
கோளுறு பிறப்பே யாயினு மாகுக
குறைவறு நின்சரண் மறவா
ஆள்வினை யொன்றை யளித்தருள் யாண்டு
மப்பனே யொப்பிலா தவனே. .. 7
தாவர நீர்வாழ் வனநகர் வனவிண்
சகுனம்வல் விலங்கெழின் மாந்தர்
தேவரென் றறையேழ் தோற்றமு ளெதனிற்
செனிக்கவுன் னாக்கினை செயினும்
சேவடித் தொழும்பி லிருப்பதே குறைவில்
செல்வமென் றொருதுணி படைந்தேன்
ஆவது புரியாய் சரவணத் தரசே
யப்பனே யொப்பிலா தவனே. .. 8
கிரியையிற் சாரியை தனில்வளர் யோகிற்
கெழுதகை யறிவினி லுனைவிட்
டாரியப·றவங்க ளாற்றுதல் பயனின்
றாமென வோர்பிடிப் பானேன்
உரிமையொ டுனைநா மழைத்திடு காறு
முணர்வொடிங் கிருவென வுரைத்த
அருமையென் பரனே யழைத்தருள் குகனே
யப்பனே யொப்பிலா தவனே.
.. 9
மாயமா மளக்கர் வாழ்வினி லுழலு
மடனெனைத் தடுத்தருள் வணந
நேயமுற் றிடினிங் கெனகுறை யெனக்கா
நெறியிதன் மேலெது வருள்கூர்
வேயுறு தோளங் கயற்கணி மதலாய்
விரதர்கள் குருமணி பதினா
றாயிரம் புகழ்ப்பாப் படித்தவற் கருளிய
வப்பனே யொப்பிலா தவனே. .. 10