நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
18. | திருத்தோத்திரம் | 10 | |
பலன் | உங்களுடைய பிறவி நீங்கவும் உயர்ந்த முக்தி பெற வேண்டுமா?
|
திருத்தோத்திரம்
பாடல் - திருத்தோத்திரம்
பண் - பஞ்சமம்;
தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி; தாளம் - ரூபகம்
திருமலி முதுமறை நுவல்பொருளுந்
தினசைவ முறைமுறை யிடுபொருளும்
பொருண்மலி மிருதிகள் புகல்பொருளும்
புகாரில்பு ராதன சாரிதமறை
அருமுறை பலநவில் கிறபொருளும்
அறிஞர்க ளறைதரு மொருபொருளும்
தெருண்மலி குகனென மொழிபொருளுஞ்
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 1
இறுதியி லியல்பரு ளதுபிரியா
விணையிலி யாமொரு பதியெனவும்
குறுகிய வறிவுடை யுயிர்களிடங்
குறியற மருவிய பொருளெனவும்
அறிவுறு பொருளினை யுயிருருவாய்
அமைவுற வனைகிற விறையெனவும்
சிறுகில்கு கனெனவு நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 2
தடமிகு பிருதிவி யாதிசிவ
தத்துவம் வரைதிரி தசமாறும்
மடலவிழ் பதுமமெ னாவரனூன்
மறைசொலு மேயதி லேபுவன
விடயமும் விடய வதீதமுமே
மேம்பட வதிதரு பொரியபொருள்
திடமலி குகனென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 3
மகளினு தரமுறை குழவியென
மலரொரு மாயையின் மிகுதுயரோ
டகமற வேகிடந் துளவெளிய
அணுக்களை வேதனை யறவிறக்கிப்
பகரரு மயனமு முயர்திதியும்
பண்ணிடு மிறையவ னீடழகு
திகழ்முரு கோனென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 4
மலவிரு ளுறையுயிர் பதியுறவே
வனையுமொ ரைந்தொழில் களையுடைய
நலவிறை யெனவு மனேகமத
நவில்வரை யறையினில் லாவிபுவாய்
இலகிடு மொருபொரு ளெனவுமெனை
யிதமுட னடிமைகொண் முருகெனவும்
செலல்வர வறுநிலை நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 5
பாதல மேழையு மேதள்ளிப்
பரவொரு நிலையிலே திருவடிகள்
ஓதவொ ணாநிலை தனின்முடிதா
னுடையவ னடியவ ருளநோவ
வேதனை தருபவர் பானமனாய்
மேவியி தம்புரி வோர்பாலிற்
சீதள முருகென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 6
பாரிவுடை யடியவர் திருவடிவாம்
படிவம துகழிவு றாதபடி
அரியமெய் யருள்வலி யாலதனை
யரனுரு வாமொரு திருவுருவாய்
உரிமை யொடுபணுசன் மார்க்கநெறி
யோதிறை யருண்முரு கோனெனவே
திரிபுற வனுதின நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 7
பொன்மய வானவ ருறுமஞரும்
பூதல மானுட ருறுமஞரும்
நன்மையி னரகர்க ளுறுமஞரு
நலியவு மளவறு பொரியவருள்
இன்மய மாகவு மருள்வடிவம்
இதவொடு கொள்குரு பரமசிவ
சின்மய முருகென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 8
உனையல தொருகதி யிலையெனவே
யுனிவழி படுமடி யவர்கருமத்
துனிவலி கடியவு மனமருளாற்
சொலும்வழு வையுநசை கிளர்நினைவால்
இனியில் வினைகள்புரி வழுவையுமே
யிரிய வருளிறைவன் முருகனெனுந்
தினகர னெனநனி நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 9
கயல்விழி மறிமகள் கணவனெனக்
கருதியிவ் வகிலமு ளேதமிழிற்
பயில்புகழ் சோடச நூறுதசம்
பன்னிய வறிஞனை யாளடிமை
தயவொடு கொண்டது போலெனையுந்
தடையறக் கொண்டிடு குருமுதன்மைச்
செயலுடை முருகென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே. .. 10