நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
19. | திருவுருமலை | 10 | |
பலன் | அடியவர் நெறி நின்று அருள் பெற வேண்டுமா?
|
திருவுருமலை
பாடல் - திருவுருமலை
பண் - பஞ்சமம்; தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி;
தாளம் - ரூபகம்
நாகர்க ளலக்கண் டீர்த்துநல் லறுவர்
நலம்பெற வருளிய விறைவா
சூகர மதனை நசித்துல கனைத்துஞ்
சுகப்பட வருளிய வீரா
தாகமாய் வலிப்போர்க் கினியதண் மழையைத்
தருமருட் கதம்பமே யமுத
சாகர மேயா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 1
எங்கணு மருள்சா னெறிசிறந் திடுமா
றிறைவனுஞ் சீடபா வந்தான்
அங்கமாக் கொளுங்கா லவற்குமோர் குருவென்
றாயினை யகத்தியன் முதனல்
புங்கவர் பலர்க்கு மருளினை யிதுநாள்
புரையுடை நான்கடைத் தேறச்
சங்க்ரகித் துரைத்தாய் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 2
பொய்யனே னெனினும் புலையனே னெனினும்
புரையறு கொலைஞனே னெனினும்
ஐயனே யுனக்கே யடைக்கல மானே
னாதலி னெனைக்கழி யாமல்
உய்யவே புரத்தல் கடமையுன் னடியே
னுளத்திடை யளவற வெழுமா
சையெலா மறுத்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 3
பெண்பதி யறுத்த கரத்தினை வளர்த்தாய்
பேசிடுஞ் செயலொழிந் திருந்த
பண்புடைக் குமர குருபரன் யாப்புப்
படித்திட வருளினை மதுரைத்
திண்புதர் தலைவ னுறுமஞ ரொழித்தாய்
சிறியனேன் மனுவிற்கு மிரங்கித்
தண்பத மளித்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 4
வி¡ரிதிரைத் திருச்சா னவியழைத் தவன்பேர்
வேந்தனின் பகைவலி கடிந்தாய்
எரிமகத் தகரைப் பாரியென வேகொண்
டெறுழ்முனி வரர்துனி யொழித்தாய்
பாரிமுகத் தொருத்திக் கெழின்முக மீ
பத்தனேன் மனுவிற்கு மிரங்கித்
தாரிசனங் கொடுத்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 5
மிகுபலத் தனுசோ ருயிர்குடித் திடுநே
மியினையன் றாரிக்களித் தவனும்
சிகுமுயிர்த் தொகைசேர் நிரயமன் னவனைச்
சிதைத்துயி ரளித்தமுக் கணனும்
திகழ்மதி யிடர்தீர்த் தவனுநீ யேயிச்
சிறியனேன் மனுவினுக் கிரங்கித்
தகுதிரு வளித்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 6
நண்ணிய வோர்மயி லினுக்குமஞ் சிகிக்கு
நாளுநற் றிருவடி கொடுத்துக்
கண்ணில கொருகே கயஞ்சிகி தனைமுற்
கருதிய வணம்பாரி கொடியாப்
பண்ணிய பரனே பரமபுங் கவனே
பத்தனேன் மனுவிற்கு மிரங்கித்
தண்ணளி யளித்தா டிருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 7
செயிருறு வோர்க ளலக்கணைத் தீர்ப்போய்
சேவடித் தொழும்பரைக் காப்போய்
குயிலுமிவ் வேழை மனுவினுக் கிரங்கிக்
கொடுதினங் குளிர்ந்ததண் ணளியைக்
கயல்விழிக் காந்தி மதியுட னரனுங்
களிகெழு துர்க்கையு மேவுந்
தயவுடை நெல்லைத் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 8
செயிருறு வோர்க ளலக்கணைத் தீர்ப்போய்
சேவடித் தொழும்பரைக் காப்போய்
குயிலுமிவ் வேழை மனுவினுக் கிரங்கிக்
கொடுதினங் குளிர்ந்ததண் ணளியைக்
கயல்விழிக் காந்தி மதியுட னரனுங்
களிகெழு துர்க்கையு மேவுந்
தயவுடை நெல்லைத் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 9
வாலுளக் குறமா னினிமதர்ச் சுரமா
மடவரன் மாமணத் தலைவா
வேலுடைச் சயத்தோய் விரைத்தொடைப் புயத்தோய்
வியன்புகழ் நொடித்தவன் பரனே
தோலுயர் வறுசொல் லுடையெளி யேனின்
றுயர்வலி கடிந்துநற் சுகமே
சாலுமா றருளாய் திருவுரு மலைவாழ்
சண்முகப் பெரும்பரம் பொருளே. .. 10