நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
21. | பூரணம் விழைந்திரங்கல் | 10 | |
பலன் | உள்ளம் கசிந்து உருகி கண்ணீர் மல்கித் துதிக்க முருகனின் அருள் கைமேல் கிடைக்க வேண்டுமா?
|
பூரணம் விழைந்திரங்கல்
பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - பித்தா பிறைசூடி
இராகம் - நாதநாமக்ரியா
தாளம் - ஆதி
பொன்கொண் மாமயி லூருயர் புண்ணிய மூர்த்தீ
உன்கண் ணீரமின் றிங்கிவ னுய்வது முண்டோ
புன்கண் மாய்த்தருள் புரிகிலை யேலுனை நம்பும்
என்கண் ணீரினை யேதுடைப் பவாரினி யெவரே. .. .. 1
ஞான்று நந்தலில் சத்தையுஞ் சித்தையு நீங்கா
ஆன்ற வின்பசொ ரூபம தாயவி ருன்னைப்
போன்ற தெய்வமுண் டோவெனைப் புணர்கிலை யாயின்
தோன்று மென்விழி நீரினைத் துடைக்குந ரெவரே. .. .. 2
தீதில் சத்தெனுந் தாதையுஞ் சித்தெனுந் தாயும்
ஆதி யந்தமி லானந்தக் குழவியு மாமென்
ஆதி யாமடி கேளெனை விரவிக்கொ ளாயேல்
வீதி தோறும்மென் விழிப்புன றுடைக்குந ரெவரே. .. .. 3
பெற்று ளோர்பிறந் தோர்மனை மகர்தமர் பிறரும்
சற்று நம்முற வலவென வுன்னியுன் சரட்கன்
புற்று ளேனெனைப் புறம்பெனக் கழிக்கினின் புரிவிங்
கற்று நானிருந் தழும்புன றுடைக்குந ரெவரே. .. .. 4
அன்பர் தங்கருத் தேயுணர்ந் தருள்புரி யருளால்
என்புன் னெஞ்சுணர்ந் துரைத்தவள் ளயிற்கர விறையே
இன்பி னின்னமு மிடையறப் புணர்ந்துகொளாயேல்
துன்பி னானழும் விழிப்புன றுடைக்குந ரெவரே. .. .. 5
நுதற்க ணாறுடை நூனமி லறுமுகங் கரந்தன்
றிதத்தை யேபுகன் மானுட வுருவென வென்முன்
புதித்து மெய்ம்மொழி யுரைத்தனை முழுதுங்கொ ளாயேல்
பதத்தை யேநினைந் தழும்புன லெவர்துடைப் பவரே... .. 6
வோரி யங்கடம் பணிபுயத் தோய்வினை மேவும்
பூரி யோர்புகு மிருணில மின்னமும் புகுதா
தோரி யங்கடி யுறநினை யென்னைநீ கழிக்கின்
மாரி போன்முகம் வடிப்பது துடைக்குந ரெவரே. .. .. 7
பொய்யை யோர்பவர் பொருந்துமிப் பூதல வாழ்வை
மெய்யை யோர்பவர் சேர்வர்கொன் மெய்ப்பொரு ளாமுன்
செய்ய பாதநம் பியவெனைச் சேர்த்துக்கொ ளாயேல்
உய்யு மாறெனக் கருள்பவ ருலகினி லெவரே. .. .. 8
கோல வாரணங் கூறொரு பரம்பொரு ணீயென்
றாலு மங்கழற் பரமனு மருளின னதுபோல்
சீல வுன்சரண் சிந்தைசெ யெனைக்கொளு கிலையேல்
தால மீதெனக் குன்னடி தருபவ ரெவரே. .. .. 9
அரிய விண்ணவர் புன்கணை வீட்டிநல் லருண
கிரியி ருந்தவற் கருளிய கிருபைவள் ளாலுன்
உரிமை கொண்டுனக் கடைக்கலம் புகுந்துள நாயேன்
பாரிவு கண்டரு ளாவிடி னெவரருள் பவரே. .. .. 10