நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
26. | ஐக்கியமன்றாட்டு | 10 | |
பலன் | மனிதப் பிறவியின் பயனை நீங்கள் உணர வேண்டுமா?
|
ஐக்கியமன்றாட்டு
பாடல் - ஐக்கியமன்றாட்டு
பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - மற்றப்பற்றெனக்கின்றி
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ரூபகம்
திங்கள் வேணியன் மைந்த னேசிவ னேயெ னாருயிர் நாதனே
மங்கு ம·றிணை யாவி யாக வகுத்தி டாதிந்த மானுட
அங்க மாக வகுத்த நின்னருட் பாட்டை நான்மற வேனினுஞ்
சங்கை காதரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 1
மின்னம் வேலமர் கைய வெம்பெரு வேந்த னேவள்ளி கந்தனே
நன்னர் சேர்மனு யாக்கை யேற்று நலம்ப டாவுறுப் பீனர்போல்
என்னை நீவனை யாம னன்குசெய் திட் ட வீர மறக்கிலேன்
தன்னு ளாரரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 2
பேழ்கெ டாவரும் பேறு சால்சிவை பிள்ளை யேசெழுங் கிள்ளையே
வாழ்வ றாவொரு வாள்வி லேதின மல்க யோக்கிய மேயிலாத்
தாழ்கு ழல்வடி வின்றி யாணுட றந்த வீர மறக்கிலேன்
தாழ்வி லாவரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 3
கோல வாற்சிகி வாக னாவருள் கூர்ந்தெ னைக்கொளு மோமனா
மாலு லாவு மனத்தர் போலெனை வைத்தி டாதுயர் சித்தனாய்
ஞால மீதெனை வைத்த வுன்னொரு நட்பை நான்மற வேனினுஞ்
சால நல்லரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 4
தேவர் நாயக வோமெ னாநினை செல்வர் நாயக வம்மனை
ஆவண் மோட்டு ளிருந்த நாண்முத லிந்த நாள்வரை யார்துயர்
யாவும் வீட்டியுங் வித்த தண்ணளி நட்பை நான்மற வேனினுந்
தாவி லுன்னரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 5
ஆரல் போலவிர் மேனி யாயெங்க ளாரி யாவள்ளி காரியா
ஏரு லாங்கலை யில்லி போலெனை யுஞ்செ யாததி யின்பமே
சேர ருந்தமி ழோடு செய்தவொர் தெய்வ வீர மறக்கிலேன்
சார மாமரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 6
மாசி லக்கர மாறு மேற்பவர் வற்ச லாவதி யற்புதா
ஆசி லாப்பொறி கற்று நூலுணர் வற்ற மூடர்கள் போலெனை
நீசெ யாதுணர் வாகு மாசெய்த ஞேய வீர மறக்கிலேன்
தாசர் மூழ்கரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 7
சிட்டர் காவல னேக டம்பணி சேந்த னேதிவ்விய சாந்தனே
மட்டி னூல்கள் படித்து மேபொய் வழிச்செல் வோர்களை யொப்பவே
சிட்ட னேனை விடாதுன் மெய்வழி சேர்த்த வீர மறக்கிலேன்
தட்டி லாவரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 8
அஞ்சொ லாளெங்க ளம்மை யாங்க நாய கிக்கு மணாளனே
கிஞ்சி லும்முனை நாடி டாது கிடக்கை மீதிழி வேலைசெய்
பஞ்சை போலெனை விட்டிடாது பணித்த வீர மறக்கிலேன்
தஞ்ச மாமரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 9
மண்ணும் வானமு மெச்ச வேபுகழ் பாடி னோனக மாமணீ
கண்ணி லாமட வோர்சி னேகித நீக்கி யுன்னொரு காமரே
எண்ணி நாளு மிருக்க வாக்கிய விட்ட நான்மற வேனினுந்
தண்ண றாவரு ளுந்தி மூழ்கியுன் றன்னை மேவ விழைத்தியே. .. .. 10