நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
29. | மெய்ம்மார்க்க விளக்கம் | 10 | |
பலன் | வாழ்க்கையில் சத்திய நெறி கிடைக்க வேண்டுமா?
|
மெய்ம்மார்க்க விளக்கம்
பாடல் - மெய்ம்மார்க்க விளக்கம்
பண் - கொல்லி
தேவாரப் பாடல் - மண்ணில் நல்ல
இராகம் - நெளரோ
தாளம் - ரூபகம்
நீரகம் பெருகு நாக நிருபனார் சுதைவார்க் கொங்கைப்
பீரகங் குளிர மாந்திப் பிரமனார் சிரசிற் குட்டி
ஏரகத் தமர்ந்த தேவை யிகனிசி சரரைக் காய்ந்த
தீரனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே... .. 1
மாவளை யாரிக்கு நேமி வழங்கிய தணிகைச் சேயைக்
கோவரர் பதியை ஞானக் குழவியைக் குமர வேளை
ஆவியர் தேவா வானை யறிஞர்க ளகத்திற் றூங்குந்
தேவனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 2
பொய்தபு மயோத்தி ராமன் போற்றிய குருந்தை ஞானச்
சைவனைத் தார கத்தின் சதுர்தனை விளக்கி னானைப்
பையுளில் பரம யோகர் பாரிவினில் வெளியாந் திவ்விய
தெய்வம தன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 3
தன்னிக ரில்லா தானைத் தனிப்பரஞ் சுடரை ஞான்றும்
மன்னுயி ரனைத்து மோம்பி மலரடி யிருத்தம் மானை
என்னக மிருக்கும் வேந்தை யேர்ச்சிகா வளத்தி லேறு
தென்னனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 4
வெறிநுக ரளிகண் மூசு மென்சுருட் குறமின் னேந்து
பொறிமுகை யழுந்து மொய்ம்புப் புனிதனைப் புனிதர் கோனைக்
குறிதிரி பேது மில்லாக் குகனைமஞ் சுமையாள் பங்கன்
சிறுவனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 5
கவலைமா கடலில் வீழ்ந்த கறையனேன் காரிசை நூறி
அவனையே யேத்த வாணை யயர்ந்ததண் கருணை யானை
மவுனிக ளகநி லாவு மாணிக்க மதனை வேற்கைச்
சிவமதை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 6
வல்வினை துமிக்குந் தேவை மறைகளை நொடித்த தேவை
நல்வினை யாளர் நாவி னவின்மனு வினுக்காந் தேவைப்
பல்கணம் வாழ்த்தும் வேளைப் பரமபுங் கவர்க ளேத்துஞ்
செல்வனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 7
காந்திசெய் யரணத் தானைக் கனைகழற் சரணத் தானைச்
சாந்தர்க ளறிவிற் றோன்று சவியுடைச் சுடரை யன்பர்
வேந்தனை விபுதர் கோனை விமலனை விமலர் வாழ்த்துஞ்
சேந்தனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 8
துண்ணெனத் துடிதான் கொட்டி யாடிடு துரையை யூனக்
கண்ணினர் காணாக் கானக் கமலநான் முகன்மா லேத்தும்
விண்ணென விரிந்து ளானை மிளிர்வடி வேல்சூ லேந்து
திண்ணனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 9
காய்சரு கருந்து முவ்வோர் கருத்தினுக் கிசைந்து ளானை
ஓய்வறு புகழ்சொன் னோன்சொல் லொருவனைப் புறம்பா மார்க்கப்
பேய்கடா முணராச் சூரைப் பெருஞ்சிவ யோகர் பேணுஞ்
சேய்தனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. .. 10