நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
33. | தாசப்பிரகாசம் | 10 | |
பலன் | அடியார்க்கெல்லாம் தூய அடியாராக நீங்கள் மாற வேண்டுமா?
|
தாசப்பிரகாசம்
பாடல் - தாசப்பிரகாசம்
பண் - கொல்லிக்கெளவாணம்
தேவாரப் பாடல் - தில்லைவாழ் அந்தணர்
இராகம் - நவரோ
பொன்மருவு பொடிமேனிப் புலவற்குத் தாசன்
புகரற்ற நறுநீபம் புனைவோற்குத் தாசன்
தென்மலய மாமுனிவன் குரவற்குத் தாசன்
செழுந்தூவி மயிலூருஞ் சிவனுக்குத் தாசன்
கன்மவினை போக்கியருள் கந்தற்குத் தாசன்
காங்கேயத் திருநாமக் கடவுட்குத் தாசன்
என்மனதி லுள்ளவயி லிறைவற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 1
சங்குமிலை சங்கரர்சு வாமிக்குத் தாசன்
றண்ணளியி னவர்தந்த குமரற்குத் தாசன்
பொங்கரவ ணிந்தவுமை மைந்தற்குத் தாசன்
பொருவற்ற வேணாமப் புனிதற்குத் தாசன்
திங்கண்முக வள்ளிமண வாளற்குத் தாசன்
றிவ்வியசுர குஞ்சாரியின் றலைவற்குத் தாசன்
இங்கிதகு ணப்பரம முருகற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாசனானே. .. 2
தீரமலி தேவசே னானிக்குத் தாசன்
றிருவேறு செம்பாதச் சிலம்பற்குத் தாசன்
வீரமலி யொருசூரன் பகைவற்குத் தாசன்
வித்தார வடிவுள்ள குழகற்குத் தாசன்
ஆரமலி தோள்ராம நாதற்குத் தாச
னாயிரம காநாம வாதிக்குத் தாசன்
ஈரமலி யிதயச்செவ் வேளுக்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 3
வென்றிவேல் கொடுகுன்று போழ்ந்தோற்குத் தாசன்
வெயின்மிக்கி லங்குகர வேலற்குத் தாசன்
பொன்றாத நித்தியசு ரேசற்குத் தாசன்
புகலாரிய வித்தைதரு புலவற்குத் தாசன்
தென்றிசைந மன்பரவு சேந்தற்குத் தாசன்
செம்மைகெழு சேவலங் கொடியாற்குத் தாசன்
என்றுநிமிர் முசுகுந்த னிறைவற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 4
தகவுற்ற வொருதார காரிக்குத் தாசன்
றாமோத ரற்காழி தந்தோற்குத் தாசன்
பகமுற்ற நந்தீசர் குருவுக்குத் தாசன்
பாவகியெ னுந்தூய பெயரோற்குத் தாசன்
அகமற்ற சுகர்வாம ரடிகட்குத் தாச
னாசறும காலோக குருவுக்குத் தாசன்
இகலுற்ற வொருகங்கை மைந்தற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 5
சேடுடைய திருவிஞ்சு செட்டிக்குத் தாசன்
சேயென்னுந் திருநாமச் செல்வற்குத் தாசன்
மாடுடைய மணிகண்டன் மகனுக்குத் தாசன்
மாமாய மாயோனின் மருகற்குத் தாசன்
பீடுடைய மலைமேவு பொரியோற்குத் தாசன்
பிணங்காவி யன்வாகு லேயற்குத் தாசன்
ஏடுடைய வெட்சிகொள்வி சாகற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 6
சீர்கொண்ட செங்கார்த்தி கேயற்குத் தாசன்
றீதற்ற குடைக்கூத்துத் தேவற்குத் தாசன்
நார்கொண்ட நலனோங்கு கடம்பற்குத் தாச
னல்லாறு முகமுள்ள நம்பிக்குத் தாசன்
தார்கொண்ட சரன்மப் பெருமாற்குத் தாசன்
தாழ்வற்ற தமிழ்ச்சங்கத் தலைவற்குத் தாசன்
ஏர்கொண்ட கதிரேசப் பெயரோற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 7
அக்கினிக ருப்பனெனு மண்ணற்குத் தாச
னானந்த மாஞ்சுப்பிர மணியற்குத் தாசன்
பொக்கமறு முத்தையப் பெயரோற்குத் தாசன்
பொருவின்மா யாமாயக் குழவிக்குத் தாசன்
துக்கமறு துடித்கூத்துக் கடவுட்குத் தாசன்
றொன்மையய னார்சிட்டி செய்தோற்குத் தாசன்
இக்குவளர் கந்தகிரி யீசற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 8
பணைநகில வனமகளின் பட்சநனி நச்சிப்
படிமீது புளிந்தனாச் சென்றோற்குத் தாசன்
திணைமீது திமிசாக நிமிர்ந்தோற்குத் தாசன்
றெய்வமுது சன்னாசி யானோற்குத் தாசன்
பிணையலணி யத்திமுகன் றம்பிக்குத் தாசன்
பேசாரிய யாழ்முனிவன் பெருமாற்குத் தாசன்
இணையளவை யில்லாத குகனுக்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 9
கல்லாலி னிறைபோல வோங்குபர வோதிக்
கண்ணாறு பெயர்க்கறிவு தந்தோற்குத் தாசன்
வில்லாரும் பழநிமிசை வெண்கச்சை சார்த்தி
மிளிர்கின்ற வொருதண்ட பாணிக்குத் தாசன்
நல்லார்கள் போல்வைக்க நினைத்தென்னை நேடி
நன்னவிர முண்டிதமாய் வந்தோற்குத் தாசன்
எல்லாரு மேத்தருண கிரிகோற்குத் தாச
னெங்குநிறை விண்குமர குருதாச னானே. .. 10