நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
37. | திருவாலவாய் | 10 | |
பலன் | மூவாசையும் நீங்கி பக்குவம் அடைய வேண்டுமா?
|
திருவாலவாய்
பாடல் - திருவாலவாய் (அருனை விசிந்திரங்கள்)
பண் - கெளசிகம்
தேவாரப் பாடல் - காதலாகி கசிந்து
இராகம் - பைரவி
தாளம் - ஆதி
பொன்னைப் பூமியைப் புன்புல வாக்கையை
மின்னை நாடி யுழன்றுள்ள வீணனேன்
தன்னை யாண்டவொர் தன்மையென் னாலவாய்
அன்னை யேயரு ளேகுகப் பிரமமே. .. 1
கட்டு மாடை கழற்றினை கந்தனை
மொட்டை யிட்டனை மோக மறுத்தனை
எட்டி நீமறைந் திட்டதென் னாலவாய்ச்
செட்டி யேயருள் செய்குகப் பிரமமே. .. 2
புண்ணி யந்தொரி யாவெறும் பொக்கனேன்
எண்ண மோர் ந்தரு ளெந்தையிங் கேயுனை
நண்ணி னேன்சுக நல்கருட் காலவாய்
அண்ண லேயெனை யாள்குகப் பிரமமே. .. 3
ஆக மோடென தாவியு முன்றனக்
கேகொ டுத்துய்ய வெண்ணிய வென்னகத்
தேகு ளிர்ந்தரு ளீயெழி லாலவாய்
ஏக னேயெனை யாள்குகப் பிரமமே. .. 4
எட்ட நில்லென நீயென்னை யேதள்
சிட்ட னானபின் ஞாயஞ் செலுங்கொலோ
நட்ட மின்றரு ணல்குதி யாலவாய்
இட்ட னேயெனை யாள்குகப் பிரமமே. .. 5
பருதி முன்னிரு ணிற்குங்கொல் பக்கமாம்
அருளின் முன்மல நிற்குங்கொ லவ்வருட்
பொருளைத் தந்தொரு பூர்த்திசெய் யாலவாய்ப்
பெருமை யேயெனை யாள்குகப் பிரமமே. .. 6
நித்த லுங்கழ னெஞ்சக மாக்கியால்
எத்த லத்துமு னேணருள் காத்திடச்
சித்தம் வைத்தருள் சீருய ராலவாய்
அத்த னேயெனை யாள்குகப் பிரமமே. .. 7
பாச மும்பசு வுந்திறம் பாவொளி
வீசு நின்னரு ளின்றிவி ளங்குமோ
ஆசை யாயின னேயதற் காலவாய்
ஈச னேயெனை யாள்குகப் பிரமமே. .. 8
என்ன கப்புல மென்று மிருக்குநீ
என்னை யின்னுமி ரண்டறக் கோடலின்
றன்னி யஞ்செய னீதிகொ லாலவாய்
மன்னெ னத்திகழ் மாகுகப் பிரமமே. .. 9
குற்றம் யாவும்பொ றுத்தருள் கூர்தியால்
அற்ற மற்றலங் காரம திர்த்துளோன்
முற்றும் வாழ்த்திய மூர்த்திநல் லாலவாய்
உற்ற வொப்பில ருட்குகப் பிரமமே. .. 10