பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
38. திருக்கன்னிநாடு 10
பலன்உறுதியான மனம், உறுதியான வழிபாடு பெற வணங்கும் வழி தெரிய வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருக்கன்னிநாடு

பாடல் - திருக்கன்னிநாடு (களிநிளைத்துரை)

பண் - இந்தளம்
தேவாரப்பண் - பித்தாபிறைசூடி
இராகம் - நாதநாமக்ரியா
தாளம் - ரூபகம்

சீருளா ரேத்துஞ் சீருடை நஞ்சிவ பெருமான்
கூருலாம் வேற்கை யோடன வரதமுங் குறைவில்
பாரெலா மேத்துங் கன்னிநா டுறைதரு பாங்கை
ஓரெலா வார்ப்பு மொருங்கியுய் வாயென துளமே. ..  1

வாக்குவன் மனதான் மதிக்கரு நஞ்சிவ பெருமான்
நோக்கொரு பனிரண் டிலகொரு நூனமி லுருவாய்ப்
பாக்குகு பொழிலார் கன்னிநா டுறைதரு பாங்கை
ஊக்கமொ டுணாரின் வாழ்குவை நாளுமெ னுளமே. ..  2

ஞானிகள் விழையொண் பொருளெனு நஞ்சிவ பெருமான்
மேனிலை விழைவோர்க் கருளவெ னாமயின் மீது
பானிற வனம்வாழ் கன்னிநா டுறைதரு பாங்கை
நீநினை வாயே னிதநனி யுங்குவை நெஞ்சே.  ..  3

நந்தலின் மறைகள் பழிச்சிடு நஞ்சிவ பெருமான்
செந்திரு முகமா றவிரரு ளுருவொடு தீமைப்
பந்தரைப் புரப்பான் கன்னிநா டுறைதரு பாங்கைச்
சிந்தைசெய் வாயேன் மனமினி துய்வது திடமே. ..  4

மாதவ னளித்த மதிப்பொரு ணஞ்சிவ பெருமான்
ஏதமி லடியர்க் கருளவெ னாமுரு கெனமா
பாதகந் தீர்த்த கன்னிநா டுறைதரு பாங்கை
நீதொரி வாயேன் மருடபுத் துய்குவை நெஞ்சே. ..  5

எக்குணங் குறியு மிலாமுத னஞ்சிவ பெருமான்
பக்குவர்க் கருளும் பாரிவொடு தேவிய ருபய
பக்கமும் விளங்கக் கன்னிநா டுறைதரு பாங்கைச்
சிக்குடை நெஞ்சே கருதிடிற் சார்வது சிவமே. ..  6

பூவினில் வெறிபோற் பொருந்திய நஞ்சிவ பெருமான்
கோவிலி னிலவோர் வடிவொடு குகப்பெயர் பூண்டு
பாவிகள் பழிதீர் கன்னிநா டுறைதரு பாங்கைத்
தாவிளை நெஞ்சே கருதிடி னிலைநமன் றமரே. ..  7

எங்கணு நிறைவா யிருந்துள நஞ்சிவ பெருமான்
சங்கரன் மகவாய்ச் சரவண பவப்பெயர் சார்ந்து
பங்கமி னதிபாய் கன்னிநா டுறைதரு பாங்கை
இங்குழ னெஞ்சே நினைவுறின் மறலுனக் கிலையே. ..  8

அழிவுதிப் பணவா வறிவெனு நஞ்சிவ பெருமான்
இழிமனச் சீவர்க் கருள்வண மயின்மிசை யிந்த்ரன்
பழிதனை நூறுங் கன்னிநா டுறைதரு பாங்கை
எழிலொடு நெஞ்சே நினைவுறின் வருபிறப் பிறுமே. ..  9

தத்துவா தீதத் தனிப்பொரு ணஞ்சிவ பெருமான்
வித்தைசால் புகழ்பா டியமுனி பாத்தொடை விரும்பிப்
பத்தர்பா டிடவே கன்னிநா டுறைதரு பாங்கைச்
சித்தமே நீயுள் கிடிலடை வதுவிழுச் சிவமே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 7ஆம் தேதி ஆதித்தவாரம்