நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
41. | பிரப்பன்வலசை | 10 | |
பலன் | தவமும், தெய்வ தரிசனம் பெற வேண்டுமா?
|
பிரப்பன்வலசை
பாடல் - பிரப்பன்வலசை
பண் - சாதாரி
தேவாரப்பண் - வானவர்கள் தானவர்கள்
இராகம் - பந்துவராளி
பூமக ளியங்குலகி னல்லதமிழ் நாவலர் புலம்பு கவிதைத்
தாமமணி நடங்கடவு ளென்னுமுரு கையரடி தன்னை யெணியே
நாமுன மிருந்தவள மேகிளர் நயப்புள பிரப்பன் வலசை
ஆமிதனை நண்ணுபவ ரன்புடைய ராவர்பழி யஞ்சு மனதே. .. 1
தொண்டரக நின்றுநிமிர் கின்றவரு ளின்பாரிவு சொந்த முறவென்
றண்டரலர் கொண்டுபுசி தம்புரிய மாதிமுரு கைய ரருணாங்
கொண்டுசில வைகல்வதி தந்தவிட மென்றுயர்வு கூறு மடர்பூ
வண்டறை பிரப்பன்வல சைப்பதி யிதாகுமெனுண் மல்கு மனதே. .. 2
மெய்யடிக ணெஞ்சக மிருந்துவிளை யாடியருண் மெய்ய ரெனுநம்
ஐயடிக ளாமுருக வேளடி நினைந்துதனி யாகி யளிநீர்
பெய்யிருகண் மூடியுளி ருந்துணர்வு கொண்டவொர் பிரப்பன் வலசைச்
செய்யபதி யீதறிதி மெய்யறிவை நாடிடு திறத்த மனதே. .. 3
சீதமதி யைச்சடையில் வைத்துமலர் வாளியுடறீய விழிசெய்
ஆதியிறை யாயகுரு சாமியெனு நம்பரனை யன்று கருதி
ஓதுமொழி விட்டக மொடுங்குநிலை கண்டவிட மென்று குயிலுங்
கோதறு பிரப்பன்வல சைப்பதி யிதாமுறுதி கொண்ட மனதே. .. 4
தஞ்சமென நிற்பவர்க ளஞ்சன்மி னெனச்சொலுரை தந்த ருள்புரி
நஞ்சிவ பிரானெனு மயூரமுரு கையரடி நண்ணி யுழலும்
நெஞ்சினை யொடுக்கியிர வும்பகலு நின்றவன முள்ள வளமே
விஞ்சிய பிரப்பன்வல சைப்பதி யிதாமடமை விட்ட மனதே. .. 5
அங்குலிக மம்பவள மென்பன வணங்கதர முங்க ருமைசால்
கங்குலினும் விஞ்சுகுழ லுந்திகழ்தெய் வானைபொரு கான வர்சுதை
தங்களொரு கொண்கனெனு நங்கடவு ணன்னினைவு தந்த தகைமை
இங்கென விளம்பிடு பிரப்பன்வல சைக்களாரி யீதென் மனதே. .. 6
உள்ளபடி யுன்னுபவ ருள்ளபடி யுய்யவென வுன்னு பொரிய
வள்ளன்முரு கையர்நடு நிற்குநிலை யைச்சொலி மறைந்த விடமும்
வெள்ளைகிளர் புட்டுயி லெழுப்புகடல் வெள்ளலைகள் வீசு வளமும்
உள்ளவொர் பிரப்பன்வல சைப்பதி யிதேயுலகை யுந்து மனதே. .. 7
மித்தைபடு வாழ்வினை விடுத்துநி வாழ்வினில் விளங்க நமையே
சுத்தமுறு கோவண முடன்றிரிய விட்டவொர் சுரேச ரடிசேர்
பத்தருயர் பூசனை புரிந்துவதி பண்புறு பிரப்பன் வலசை
இத்தலம தாமறிதி வைத்தநிலை நிற்குமென தேசின் மனதே. .. 8
துன்றுமறு பொன்மவுலி யெண்டிசையு மின்னவதி சுந்த ரமலி
பொன்றொடையல் கிம்புரி வயங்குமெழின் மொய்புடைய பூரண ரருள்
ஒன்றைநனி யுன்னியுளொ டுங்குணர்வு கண்டவொர் பிரப்பன் வலசை
சென்றவ ரிருந்தவரு மன்புடைய ராவரறி தெய்வ மனதே .. 9
நாடறிய தெய்வமென வேமறைசொ லாறுமுக னஞ்சி வனெனாப்
பாடல்பல பாடியவொர் சோணகிரி கண்டவிரு பத்ம வடியைக்
கூடவென நாமினிது கொண்டநடை கட்குதவி செய்த சுகுர்தர்
பீடணவி வாழிது பிரப்பன்வல சைப்பதி பிடித்த மனதே .. 10