பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
42. பரமப்பிரகாசம் 10
பலன்இறைத் தொண்டில் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

பரமப்பிரகாசம்

பாடல் - பரமப்பிரகாசம்

பண் - பழம்பஞ்சுரம் / கொல்லி
தேவாரப்பண் - மண்ணில் நல்ல
இராகம் - சங்கராபரணம் / நவரோ
தாளம் - ரூபகம்

கங்கை சூடிறை புதல்வ ரோகன கந்த மாதன வீசரோ
அங்க மாறுடை யைய ரோதுடிக் கைய ரோவெறி சூலமே
செங்கை மீதணி தேவ ரோசிவை செல்வ ரோசுர குஞ்சாரி
பங்க ரோவர துங்க ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  1

வோரி கொண்ட கடம்ப ரோகுற மின்னி டஞ்செ லிடம்பரோ
வாரி யுண்டவர் குரவ ரோபவ னிறைவ ரோவறு மங்கைமார்
பீரை யுண்ட புனீத ரோவடி பேணு மன்பர்க ளன்பரோ
பார ருந்தவ ரரைய ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  2

பால மீதொளிர் கண்ண ரோவுயர் பன்னி ரண்டுகை மன்னரோ
கோல நீறணி சீல ரோதுடி கொட்டி யாடிடு கூத்தரோ
நூல ரோவடி வேல ரோசுரர் நோவ றுத்தவ ரோசிலம்
பால வேதிரி யடிய ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  3

பூவ றாங்கிய மெய்ய ரோமணி பூண்ட கிம்புரி மொய்ம்பரோ
சேவ றாங்கிய கொடிய ரோவறு முடிய ரோவுயர் செல்வராம்
தேவர் தாங்கிய வடிய ரோவதி தேசி லங்கிடு வெண்மலைக்
கோவி றாங்கிய குமர ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  4

பூநி ரம்பிய வழக ரோபடர் போத னார்தொழு குழகரோ
மாநி ரம்பிய கருட கேதனன் மருக ரோநித முருகரோ
தூநி ரம்பிய பழநி வெற்புறை சுமுக ரோவெழி லார்தமிழ்ப்
பாநி ரம்பிய புலவ ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே.  ..  5

அண்டர் தம்பகை நாச ரோவரு ணேச ரோமக ரப்பெயர்க்
குண்ட லஞ்செறி காத ரோகுக வென்று சொல்பவர் நாதரோ
விண்ட லம்புகழ் சேய ரோமுது வேத மந்திர வாயரோ
பண்ட ருஞ்சிகி யிறைவ ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  6

உலகெ லாந்தரு நாத ரோதிக ழுலகெ லாம்பணி பாதரோ
உலகெ லாந்தொழு மாத ரோநிலை யுலகெ லாஞ்சொலும் வேதரோ
உலகெ லாம்பட ரார்வ ரோசெறி யுலகெ லாங்கமழ் மார்பரோ
உலகெ லாங்கவ ரூழ ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே.  ..  7

யோகஞ் செய்குந ரப்ப ரோநிறை யோகி லேவரு துப்பரோ
சோகம் பாவனை மூல ரோவளர் சோகம் பாவனை யாலறாப்
போகஞ் சேர்கெனு நீத ரோபாரி பூர ணச்சிவ போதரோ
பாகங் கூர்பவர் தலைவ ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  8

பிறப்பி லாதவொர் பொரிய ரோபொரி யார்ப ழிச்சிட வுரியரோ
இறப்பி லாதவொ ரிறைவ ரோவது விதுவெ னச்சொல விசையுமோர்
குறிப்பி லாதவொர் நிலைய ரோவறு குணப ராபர வருளரோ
பறப்பி லாதவொர் முதுவ ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  9

ஏசி லாத சுரேச ரோசக தீச ரோபர மேசரோ
காசி லாவரு ளாள ரோவுழல் கான டாத்தொரு தேரரோ
ஆசி லாவரு ணாச லப்பெய ரானி னைந்த குகேசரோ
பாச மாமல நாச ரோநமை யடிமை கொண்டவொர் பரமரே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 28ஆம் தேதி ஆதித்தவாரம்