பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
45. எண்ணலங்கார லகரி 10
பலன்வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வேண்டுமா? அல்லது நல்ல மழைவளம் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

எண்ணலங்கார லகரி

 பாடல் - எண்ணலங்கார லகரி

பண் - இந்தளம்
தேவாரப்பண் - ஒன்றுகெலாம் அவர்
இராகம் - நாதநாமகிரியா

ஒன்றா மவ ரோதிய தாதிமுகம்
ஒன்றா மவர் சூர னுடம்பெறிவேல்
ஒன்றா மவ ருன்னத ஞானகதி
ஒன்றா மவ ருண்மை வியாபகமே. ..  1

இரண்டா மவ ராடெழி லேறுகழல்
இரண்டா மவ ரேசறு தேவிவகை
இரண்டா மவ ரேறிள மஞ்ஞை விழி
இரண்டா மவ ரேர்க்கொடி வீயடியே.  ..  2

மூன்றா மவர் சொல்லிய மூத்ததமிழ்
மூன்றா மவர் தம்முக மொன்றுவிழி
மூன்றா மவர் முத்திகொ ளான்மவகை
மூன்றா மவர் மொய்ம்புர மின்னூலே. ..  3

நான்கா மவர் நல்கிய நாதமறை
நான்கா மவ ராகம நற்பிரிவு
நான்கா மவ ரூரு நறுந்தகர்க்கால்
நான்கா மவர் நட்பி னருள்வரமே. ..  4

ஐந்தா மவ ராற்று மருங்கருமம்
ஐந்தா மவ ராணைசெய் பாசவகை
ஐந்தா மவ ராறற வோர்க்குணர்த்தல்
ஐந்தா மவ ரால்விரி பூதமரோ.  ..  5

ஆறா மவ ரானன மென்றறைதல்
ஆறா மவ ருண்ட முகைச்சியரெண்
ஆறா மவர் முக்கிய மான தலம்
ஆறா மவர் மந்திர வக்கரமே.  ..  6

ஏழா மவ ரெண்ண மிழைத்தகடல்
ஏழா மவர் சிட்டியி லேதோற்றம்
ஏழா மவ ரேர்க்கொடி யானவனா
ஏழா மவ ரின்னிசை யின்சுரமே. ..  7

எட்டா மவ ரூழியப் பாலாரினம்
எட்டா மவர் குட்டு மிருஞ்சிரன்கண்
எட்டா மவ ரின்சிவ யோகாங்கம்
எட்டா மவ ரீறி னெடுங்குணமே. ..  8

ஒன்பா னவ ரைத்தொழு துய்வீரர்
ஒன்பா னவ ருத்திசொல் காதைரசம்
ஒன்பா னவர் நூபுர முற்றமணி
ஒன்பா னவ ராணை யுலாங்கோளே.  ..  9

பத்தா மவ ரைச்சிந்தை பண்ணுதிசை
பத்தா மவ ருக்கிதிற் பாடுகவி
பத்தா படி யாயென் றவர்சொனசம்
பத்தார் புகழ்ப் பாவலர் தேவவரே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஐப்பசி மாதம் 2ஆம் தேதி குருவாரம்