நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
47. | பூரணப்பொருள் | 10 | |
பலன் | கலை ஞானம் பெற வேண்டுமா?
|
பூரணப்பொருள்
பாடல் - பூரணப்பொருள்
பண் - கொல்லி
தேவாரப்பண் - மண்ணில் நல்ல
இராகம் - நெளரோ
தாளம் - ரூபகம்
வேதத்தி னீறும் யாணர் மேயதந் திரத்தி னீறும்
போதத்தி னீறு ஞாலம் புகழ்பெரு யோகத் தீறும்
நாதத்தி னீறு ஞாட்புக் கலையுடை யீறு மென்றன்
போதத்தைக் கவர்சே யாமோர் பூரணப் பொருளே யன்றே. .. 1
தன்னுடை யியற்கை யாகத் தயங்கரு ளாகும் யானைக்
கென்னுடை நினைப்பி யாவுங் கவளமா வீந்து பற்றும்
மன்னுடை யிறையா யென்னுண் மறைந்திருந் தாட்டு வானாய்ப்
பொன்னுடைச் சேயாய் நிற்போன் பூரணப் பொருளே யன்றே. .. 2
அறிவற்ற சடத்தி னுள்ளே யழிவற்ற பொருளாய் மேலோர்
அறிவித்தா லறியு மாவி யானதைச் சதசத் தென்னா
வறிதற்ற வாக மங்கள் வழுத்துதல் பொருந்து மென்று
பொறிபற்ற வுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 3
நந்தலின் றிருத்த லானு ஞானமாய் விளங்க லானும்
சுந்தர வேதஞ் சத்தாய்த் துலங்கிடு சித்தா யோதும்
அந்தர மாத்து மாவிற் சுமையுமென் றழுத்த மாகப்
புந்தியி லுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 4
பாசம நினைவிற் குள்ளே பரநினை வமிழ்ந்து நிற்கும்
பாசமா நினைவை நீக்கிப் பரநினை வாலே யந்த
ஈசனை யறிதன் ஞான விளக்கம தென்று தேவ
பூசனை யுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 5
தரணிவாழ் கம்பக் கூத்தர் தாஞ்செயுந் திறம்போ லந்தப்
பரநினை வதனிற் பாதி பரத்திலே யிருக்கப் பாதி
பரவினை யதனைச் செய்யப் பழகிமற் றதையுஞ் சேர்த்துப்
பொருதென வுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 6
பரநினை வதுவே ஞானப் பார்வையாத் திளைக்கு மந்தப்
பரநினை வில்லா வெல்லாம் பாசத்தி னினைவே யென்றும்
பரநினை வுதித்தாற் பாச நினைவது பாறு மென்றும்
புரையற வுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 7
பாசமா நினைவே தோன்று பகலென்று மதனை நீங்கி
ஆசுறு மலத்தி லாழ்த லறிவிலா விரவே யென்றுந்
தேசிலா விரண்டு நீத்த திரம்பர நினைவே யென்றும்
பூசகர்க் குணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 8
இத்திரம் வாய்க்கு மானா லிருவினை நீங்கி மோன
முத்திரை யதனி னின்றே முத்தியை யடைவா ரல்லார்
எத்திரத் தானுஞ் சேரா ரென்பது தீர்க்க மென்று
புத்தியி லுணர்த்துஞ் சேயோன் பூரணப் பொருளே யன்றே. .. 9
கருத்தடங் காதார் ஞானங் கதைப்பது கருத்தி லாதான்
நெருப்பெனப் பொறித்த வேட்டை நேரடுப் பிடவைத் தூது
தரத்தினைச் சிவணு மென்றோர் பவராரி தாதா தேடும்
பொருப்பினா மத்தா னாள்சேய் பூரணப் பொருளே யன்றே. .. 10