நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
4. | அடைக்கலம் | 10 | |
பலன் | சரணாகதி அடையும் வழி தெரிய வேண்டுமா?
|
அடைக்கலம்
பாடல் - அடைக்கலம்
பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - பித்தா பிறைசூடி
இராகம் - நாதநாமக்ரியா
தாளம் - ரூபகம்
அஞ்சு மாகி யாறு மாகி யாதி யந்த நாப்ப ணின்றி
விஞ்சி யேநி றைந்த தாகி வேலு டைக்கை யானென் றாகித்
துஞ்ச றோற்ற நீத்த தீத சுப்பிர மணிய மான தேவே
தஞ்ச மேவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 1
பெண்ணு மாகி யாணு மாகிப் பேத மோட பேத மும்மாய்
மண்ணு மாகி விண்ணு மாகி மற்று மேற்ற செயல்க ளாகி
எண்ணொ ணாச்சை தன்ய மும்மா மீச னேசு ரேச னேநல்
தண்ண மேவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 2
நந்தி யாட கேசு ரர்நீ லன்க ரன்செம் பானு கம்பன்
தந்தி பூணுங் காள கண்டன் சங்கு கர்ணன் றண்டி குண்டன்
கொந்து சூட னேக ருத்ர கூளி சூழ்ச் சிகண்டி யூர்ந்தோய்
சந்த மேவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 3
துங்க வார ணங்கச் சையாச் சூடி யேமப் பொடிதி மிர்ந்தை
அங்க மாக யோக தண்ட மான தொன்று கரம்பி டித்துச்
செங்க மேய சிறிய சிக்கந் திகழ நின்ற பழநிச் சித்தா
சங்கை வீட்டுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 4
செப்பொ ணாத பரம பத்தி செய்துள் ளீர மேற்ற வர்க்கும்
ஒப்பி லாத பிராண யோக முற்ற வர்க்கும் ரா யோகம்
முப்பொ ருள்கொண் டாடி னோர்க்கு மூல னான பழநிச் சித்தா
தப்பி லாவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 5
கும்ப யோனி வரைக ளிங்குக் கொணர்தி யென்ற படிகொ ணர்ந்த
வம்ப றாவு மாவி டும்பன் வாழ வேநல் லடிமை கொண்டோய்
நம்பி ரானென் றேத்த விந்நா ணாயி னேற்குங் கிருபை செய்தோய்
தம்பி ரானின் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 6
ஆரல் போலுங் காவி வட்ட மரையில் வீக்கி யதற்கி யைந்த
சீரி லங்கு ருத்ர சின்னந் தேச மோடு மிலக வுள்ளாய்
ஆர ண்ங்க ளாக வுள்ளோ யைந்தொ டேயொன் றதிக முள்ளோய்
தார காவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 7
அண்டர் கோற்குத் திருவ ளித்தோ யாறு பேர்க்கன் றருளி கைத்தோய்
தொண்டர் தம்முட் பதிவி ருந்தோய் சுருதிச் சென்னி மீதி ருந்தோய்
துண்ட மாறு மோரு ருக்கட் டுன்ன வங்க விண்டு றைந்தோய்
தண்ட மேவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 8
பிரம னைத்தா ளாலு தைத்தோய் பிரம சிட்டி தனையி ழைத்தோய்
பரம னுக்கொன் றோதி நின்றோய் பதும நாபன் பரவப் பெற்றோய்
கரம திற்பொன் வேலி யங்கக் கருதார் தம்மைச் செறுத்து கந்தோய்
சரண மேவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 9
சிட்டி காவ லொடுந சிப்புந் திரோப வஞ்செவ் வருட்ட யாவும்
மட்டி லாம லேந டாத்த வல்ல மையுள் ளோய்வி னோதச்
செட்டி யாக வடிவு கொண்டோய் சீர்த்தி சொனவற் கருள் புரிந்தோய்
தட்டி லாவுன் னடிப்பண் போதுந் தாச னானின் னடைக்க லம்மே .. 10