நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
52. | மயிலமலை | 10 | |
பலன் | பொய்யும், வினையும் நீங்க வேண்டுமா?
|
மயிலமலை
பாடல் - மயிலமலை (வெண்டளையான் வந்த தரவுகோச்சகக்களிப்பா)
பண் - பஞ்சமம்
தேவாரப்பண் - தானெனை முன் படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்
சீரார் தெருளாக்கச் சேவடியே சேர்வேனென்
றூரார் மனைவிமகா ருற்றாரெல் லாமகன்றேன்
நாரார் மனத்திடை நீ நல்லன்பு வையாயேல்
வாராதோ கண்ணீர் மயிலமலை வாழ்குகனே. .. 1
நன்றுகறை யெண்ணா நிடூதனர்போ னாளுமுயிர்
கொன்றுபுசித் தோருமிழி கொங்குகுடித் தோருமென்றும்
பொன்றுதலி லாவுனைச்சூழ் புண்ணியத்தி னுய்ந்தார்நான்
மன்றுபட்டு மெய்த்தேன் மயிலமலை வாழ்குகனே. .. 2
கட்டுரையில் லாதாருங் காமிகளுங் கள்வருநற்
சிட்டரென வானாருன் சேவடிபா வித்தளவில்
நெட்டுலகி னின்னடியே நெஞ்சிருத்தி யுன்னொருநான்
மட்டுமலை கின்றேன் மயிலைமலை வாழ்குகனே. .. 3
நல்காவன் னெஞ்சருநன் ஞாயம் பிறழ்ந்தவரும்
செல்கால மெய்துமுனுன் சேவடிசிந் தித்துய்ந்தார்
பல்காலு நின்னடியைப் பாடுமெனக் குன்னருடான்
மல்காத தென்னே மயிலமலை வாழ்குகனே. .. 4
ஆராய வொண்ணா வதிபாவ மேபுரிந்த
நீராரு நின்னுருவை நெஞ்சிருத்தி யுய்ந்தார்கள்
தாராள மாவுனிரு தாடுதிக்கு மெற்குனருள்
வாராத தென்னே மயிலமலை வாழ்குகனே. .. 5
பாழ்வேட நம்பிப் பதிதரென நின்றோரும்
சூழ்வேக முள்ளோருந் தோத்திரித்து வாழ்ந்ததுண்டு
தாழ்வேது மில்லாவுன் றன்னைநனி கூடினல்லால்
வாழ்வேனோ நான்றான் மயிலமலை வாழ்குகனே. .. 6
காட்டார்க்கு நாட்டார்க்குங் காசில் கருணையினால்
தாட்டா மரைகொடுத்தாய் தாள்பழிச்சு மென்னைவினை
ஆட்டாது பேரருளா லாட்டி யளாவவர
மாட்டாயோ மாண்பார் மயிலமலை வாழ்குகனே. .. 7
வெண்பாவுஞ் செம்பாவும் வித்தாரப் பொன்பாவும்
பண்பார் கரும்பாவு நின்போரிற் பாடிடுவேன்
கண்பார்வை வந்தெனது கம்பலையைக் காதியருள்
வண்பாத வஞ்சான் மயிலமலை வாழ்குகனே. .. 8
நின்னைமிகப் பொச்சாந்து நீளுலகி னில்லாமல்
தென்னிளமை யிற்றானே சேரவந்த பாக்கியநீ
என்னையிது நாண்மறக்க ஞாயமிலை யெங்கணுமாய்
மன்னுமதி தாராய் மயிலமலை வாழ்குகனே. .. 9
சிந்தைமயங் காமலெனைச் சித்தாந்த வீட்டிடைவை
கந்தமணி தெய வமகள் காட்டார் மகள்கொழுநா
சந்தமுனி நெஞ்சத் தடங்கமல மேயமுதால்
மந்திகுதி கொள்ளு மயிலமலை வாழ்குகனே. .. 10