பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம்

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
6. ஆறெழுத்துண்மை (1) 10
பலன்“சரவணபவ” மூல மந்திரமே நம் தாரக மந்திரம் என்று உச்சரிக்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

ஆறெழுத்துண்மை (1)

பாடல் - ஆறெழுத்துண்மை (1)

பண் - காந்தாரபஞ்சமம்
தேவாரப் பாடல் - சொற்றுணை வேதியன்
இராகம் - கேதாரகெளலை
தாளம் - ஆதி

அற்புத மாகிய வருமறை மொழிபோல்
வெற்புயர் புவனம்பல் விளங்கிடு மாறு
பற்பல தேவர்கள் படர்ந்தவிண் ணுறினும்
தற்பர மாவது சரவண பவவே.  ..  1

பத்தியு ஞானமும் பரவிடு மார்க்கம்
எத்தனை யோவகை யிருக்கிநு மிகத்தில்
முத்திதந் தனுதின முழுப்பல னல்கச்
சத்திய மாவது சரவண பவவே.  ..  2

பூசிக்கும் வானவர் புரவல னாவி
வாசிக்கு மாவடி வழிபடி னென்றும்
பாசத்தை நசித்திவண் பரப்பிரம வாழ்வைத்
தாசர்பங் காக்கிடுஞ் சரவண பவவே.  ..  3

அருணல முள்ளவ னாதிமுன் னுள்ளான்
பொருணல முள்ளவன் பூசித வடியார்க்
கிருணில மெய்தினு மிதமுட னேயத்
தருணத்திற் காப்பது சரவண பவவே. ..  4

பொடிபொலி மேனியன் புரண வியோம
வடிவுடை யயிலுடை மனனடி கைகூப்
படியவர்க் கிடுக்கணிவ் வவனியிற் குறுகின்
சடிதியிற் றடுப்பது சரவண பவவே. ..  5

மஞ்சிகைச் செவியோன் மயிற்பரி யூர்வோன்
தஞ்சமென் றவர்க்கரு டருசம ரூரான்
செஞ்சரண் வாழ்த்துநர் திருவடி சேர்வார்
சஞ்சலந் தவிர்ப்பது சரவண பவவே. ..  6

பொங்கிடு புனலிலம் பூவில்வெங் கனலில்
எங்கணு முளவெளி யில்வளி பகலிற்
கங்குலி லடியவர் கருத்துநன் காகச்
சங்கடந் தீர்ப்பது சரவண பவவே. ..  7

தென்றிசைக் கோன்விடு திரிவிதத் தூதர்
குன்றெனும் புயமலை குலுங்கமுக் குடுமி
வென்றிகொள் கடந்தடி வீசிவெம் பிடினும்
தன்றுணை யாவது சரவண பவவே. ..  8

தேவியுந் தேவனுந் திருவுரு வருவம்
மேவி யனாதியாய் மினிர்தல்சண் முகமென்
றாவலுற் றுணர்பவ ரழிவுறா வண்ணஞ்
சாவினைத் தடுப்பது சரவண பவவே. ..  9

இந்திரன் முனிவர்க ளேத்துபொற் சரணான்
செந்திரு நகரிடஞ் சேர்ந்ததில் வாழ
அந்திருப் புகழ்பா டினவருக் கபயம்
தந்ததைத் தருவது சரவண பவவே. ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) பங்குனி மாதம் 13ஆம் தேதி சுக்கிரவாரம்