நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » இசை » இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
7. | ஆறெழுத்துண்மை (2) | 10 | |
பலன் | பகை, அகால மரணம் பயம், பில்லி, சூனியம் முதலியவற்றில் இருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டுமா?
|
ஆறெழுத்துண்மை (2)
இசை - ஆறெழுத்துண்மை (2)
பண் - கௌசிகம்
தேவாரப் பாடல் - காதலகி கசிந்து
இராகம் - பைரவி
தாளம் - ஆதி
எண்ணில் பல்வித மாக விருந்திடு
மண்ணொ டைந்து வகைப்படு பூதமும்
பண்ணி வைத்துப் பராபர மாய்நிற்றல்
அண்ண லார்பெய ராறக்க ரங்களே .. 1
பூரு வந்தக் கிணம்புகழ் வாருணம்
சீரு யர்ந்த வுதக்கடி சேணுநல்
பூர ணச்செய லிற்பொலி வுற்றுள்ள
ஆர ணன்பெய ராறக்க ரங்களே
.. 2
துய்ய மூலமுங் குய்யமுந் தொப்புளும்
மெய்ய னாகத மும்மின் விசுத்தியும்
மைய மான லலாடமு மாய்நிற்கும்
ஐய னார்பெய ராறக்க ரங்களே .. 3
ஓது மாரண மாகம முன்னரும்
கோதி லாத புராண குலங்கணல்
நீதி யாமற நூனிக மங்களும்
ஆதி யின்பெய ராறக்க ரங்களே .. 4
ஊறி கந்தசைத் தோதி யழுங்கலை
நூறி நல்லக நோன்புறு வார்கட்காம்
கூற ருஞ்சத்த கோடிநன் மந்த்ரமும்
ஆறு ளோன்பெய ராறக்க ரங்களே .. 5
ஒப்பின் மாவசி யஞ்செவ் வழைப்பொரு
துப்பு றாமோக னந்தம்ப னஞ்சொலத்
தப்பி லாதவுச் சாடன மாரணம்
அப்ப னார்பெய ராறக்க ரங்களே .. 6
சுத்த மான சுகப்பொரு ளொன்றனைச்
சித்த மீதிருத் தித்தினந் தோறுநல்
பத்தி செய்தவும் பர்க்கரு டந்தவை
அத்த னார்பெய ராறக்க ரங்களே .. 7
விண்ட லத்துறை விஞ்சையர் கந்தர்வர்
தெண்டு டைத்தெருட் சித்தர் முனீசுரர்
கொண்ட வின்பு பெறற்கருள் கூர்ந்தவை
அண்டர் கோன்பெய ராறக்க ரங்களே ; .. 8
செம்பொ றிக்கண் விழித்துச் சினந்தடற்
றும்பெ குத்தடி சூலம் பிடித்தெமன்
கெம்பு கிங்கரர் கன்மங் கெடுப்பவை
அம்ப ரன்பெய ராறக்க ரங்களே .. 9
நீண்ட வாழ்வுடை நித்த வகத்தியன்
பூண்ட மாவனு பூதி புகன்றவன்
காண்டல் கூர்பலர் கண்ணா யிருந்தவை
ஆண்ட வன் பெய ராறக்க ரங்களே .. 10